தூத்துக்குடி: இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணியைப் பார்வையிடுவதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ‘தனியார் நிறுவனம் ராக்கெட் ஏவியது நல்ல காரியம். இதனால் பெரிய நிறுவனங்கள் ராக்கெட் விடுவதற்காக வருவார்கள். இது மகிழ்ச்சியளிக்கக்கூடியது’ எனத் தெரிவித்தார்.
மேலும் சந்திராயன் அடுத்த ஆண்டு, விண்ணில் ஏவப்படுவதாக இஸ்ரோ தலைவர் கூறினார். மேலும் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க இருக்கும் இடம் முடிவடைந்த நிலையில், பணிகள் விரைவில் நடைபெற இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க:மைக்ரோசாப்ட் டீம்ஸில் "sign langugae view" அறிமுகம்...