ETV Bharat / state

‘ஓபிஎஸ் செய்வது தர்ம யுத்தம் அல்ல துரோக யுத்தம்’ - ஆர்.பி. உதயகுமார் - தர்ம யுத்தம்

ஓபிஎஸ் மௌனமாக தொடங்கும் யுத்தம் தர்மயுத்தம் அல்ல அது துரோக யுத்தம் என கோவில்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் விமர்சித்துள்ளார்.

Etv Bharat ஆர்.பி. உதயகுமார்
Etv Bharat ஆர்.பி. உதயகுமார்
author img

By

Published : Aug 21, 2022, 4:21 PM IST

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் அதிமுக 50ஆவது ஆண்டு பொன்விழா மற்றும் கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் ராஜூ பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், எட்டையாபுரம் நகரச் செயலாளர் ராஜகுமார் தலைமையில், முன்னாள் வருவாய்த்துறை அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.பி.உதயக்குமார், முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

அதிமுக கட்சியில் 50 ஆண்டு காலம் பயணித்த மூத்த உறுப்பினர்களுக்கு சான்றிதழ், மற்றும் விருது வழங்கி கௌரவித்தனர். மேலும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எட்டையாபுரத்தில் உள்ள மனநல காப்பகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் 7 முறை தனது நிலைப்பாட்டினை ஓ. பன்னீர்செல்வம் மாற்றியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓ. பன்னீனர் செல்வம் முதலமைச்சர் பதவி ஏற்றார், பின்னர் ராஜினாமா செய்தார், பின்னர் தர்மயுத்தம் தொடங்கினார். பின் திமுகவுடன் இணைந்து சட்டப்பேரவையில் அதிமுகவிற்கு எதிராக வாக்களித்தார்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி எடுத்த முயற்சியின் காரணமாக ஓ. பன்னீர்செல்வம் கட்சியில் கட்சியில் இணைக்கப்பட்டு துணை முதலமைச்சர், கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இருந்த போதிலும் அவரிடம் இருந்து ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கவில்லை. முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கும்போது ஓபிஎஸ் மௌனயுத்தம் நடத்தினார்.

இதனால் அதிமுக செல்வாக்கு 5 விழுக்காடு சரிந்தது. சட்டப்பேரவை தேர்தலின்போது தனது தொகுதியை தவிர்த்து மற்ற தொகுதிகளில் தேர்தல் பரப்புரைக்கு ஓபிஎஸ் செல்லவில்லை. எதிர்கட்சி தலைவர் பதவி யாரூக்கு என்று வரும்போது வழக்கம் போல ஓபிஎஸ் மௌன யுத்தத்தினை தொடங்கினார். எந்த தியாகத்தினையும் செய்தவருக்கு தலைவர் பதவி எதற்கு என்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேட்கின்றனர்.

எப்போதெல்லாம் தனக்கு பதவி கிடைக்கவில்லையோ அப்போது எல்லாம் ஒரு மௌன யுத்தத்தினை தொடங்குவார். அதற்கு பெயர் தர்மயுத்தம் என்று சொல்வார். ஓபிஎஸ் மௌனமாக தொடங்கும் யுத்தம் தர்மயுத்தம் அல்ல அது துரோக யுத்தம். சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஒட்டுமொத்த பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அணிவகுத்து நிற்கின்றனர்.

காலவதியானர்கள், காணமால் போனவர்களை அழைத்து வந்து ஓபிஎஸ் பதவிகள் வழங்கி வந்தார். நீதிமன்ற தீர்ப்பினால் அதுவும் போகிவிட்டது. எப்போதெல்லாம் தன் பதவிக்கு ஆபத்து வருகிறதோ, அப்போது எல்லாம் கட்சிக்கு ஆபத்து போன்ற மாயத்தோற்றத்தினை ஓபிஎஸ் உருவாக்குவார். அதற்காக போராடுவார், தர்மயுத்தத்தினை நடத்துவார்.

செய்தியாளர்களைச் சந்தித்த உதயகுமார்

அவருடைய யுத்தங்கள் தோல்வியில் தான் முடிந்துள்ளது தவிர ஓபிஎஸ்க்கு வெற்றி தராது. பல வதந்திகளை உருவாக்கி வருகிறார். விலாசத்தினை தொலைத்தவர்கள் தான் ஓபிஎஸ் பக்கம் செல்கின்றனர். நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தான் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது” என்றார்.

இதையும் படிங்க: அவசரநிலையில் அன்று பிடில் வாசித்த ரோம் மன்னன்...இன்று போட்டோ ஷூட் நடத்தும் முதலமைச்சர் ஸ்டாலின்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.