கோவில்பட்டியிலிருந்து பசுவந்தனை அருகேயுள்ள கப்பிகுளத்திற்கு அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல் கப்பிகுளம் செல்லும் அரசுப் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. தூத்துக்குடியில் சில நாள்களாக விட்டு விட்டு மழை பெய்துவருகிறது. இன்றும் மழை பெய்தது. அப்போது கப்பிகுளம் சென்ற அரசுப் பேருந்தின் மேற்கூரையில் ஆங்காங்கே ஓட்டைகள் இருந்த காரணத்தினால், மழைநீர் பேருந்திற்குள் விழுந்தது.
இதனால் பேருந்திற்குள், ஈரமாகி சேறும், சகதியுமாக காட்சியளித்தது. பேருந்திற்குள்ளும் மழை பெய்த காரணத்தால், சில பயணிகள் பேருந்துக்குள் குடை பிடித்தப்படி பயணித்தனர்.
ஓட்டுநர் இருக்கை பகுதியிலும் மழைநீர் அதிகமாக உள்ளே வந்த காரணத்தினால் ஓட்டுநரும், வேறு வழியில்லமால் கையில் குடையை பிடித்தவாறு பேருந்தை இயக்கினார்.
தற்போது பருவமழை பெய்து வருவதால், இது போன்ற சேதமடைந்த பேருந்துகளை சீரமைக்க வேண்டும் அல்லது மாற்றுப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் அனைவரும் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மழை ஓய்ந்தும் வெள்ளம் தேங்கி நிற்கும் அவலம்! பொதுமக்கள் பாதிப்பு!