மதுரையில் இருந்து கன்னியாகுமரி வரை 450 கோடி மதிப்பீட்டில் ரயில்வே இருவழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் பணிகள் நிறைவடைந்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முதல் கடம்பூர் வரையிலான 21 கிலோமீட்டர் ரயில்வே வழித்தடத்தை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் தலைமையில் ரயில்வே அலுவலர்கள் குழுவினர் ட்ராலி வாகனத்தில் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வுப்பணிகள் நிறைவுற்றதும் கோவில்பட்டி முதல் கடம்பூர் வரையிலான இருவழித்தடத்தில் 120 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடைபெறும் என ரயில்வே அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஸ்டாலின் நிம்மதியாகவே இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு