ETV Bharat / state

புரெவி புயல் முன்னெச்சரிக்கை: தூத்துக்குடியில் 63 இடங்களில் புயல் நிவாரண முகாம்கள் - thoothukudi district news in tamil

புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடியில் 63 இடங்களில் புயல் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

purevi cylone precaution
புரெவி புயல் முன்னெச்சரிக்கை: தூத்துக்குடியில் 63 இடங்களில் புயல் நிவாரண முகாம்கள்
author img

By

Published : Dec 2, 2020, 5:11 PM IST

தூத்துக்குடி: கடந்த சில நாள்களுக்கு முன்பு புதுச்சேரி அருகே நிவர் புயல் கரையைக் கடந்த நிலையில், வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அந்தக் காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறும் எனவும் அப்புயலுக்கு நிரெவி என வானிலை ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டிருந்தனர்.

இப்புயல், பாம்பன்-குமரி இடையே கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயலால், தென்மாவட்டங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்திருந்தது.

இதன்காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அந்தந்த மாவட்டங்களில் எடுக்கப்பட்டுவருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் புரெவி புயலை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் குமார் ஜெயந்த் நேற்று அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

கனமழை பெய்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், வெள்ளநீர் தேங்கும் பகுதிகள் குறித்தும் கேட்டறிந்த அவர், தேங்கிய மழைநீரை வெளியேற்றத் தேவையான மின்மோட்டார்கள், மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருப்பதை உறுதிசெய்துகொண்டார்.

ஒலிப்பெருக்கி மூலம் மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை

இந்தச் சூழ்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தின் காயல்பட்டினம், ஆத்தூர், முக்காணி பகுதிகளில் கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், வருவாய் அலுவலர் விஷ்ணு சந்திரன் உள்ளிட்டோர் ஆய்வுமேற்கொண்டனர்.

அப்போது, மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களுக்குப் புயல் எச்சரிக்கைவிடுத்ததோடு, கவனமாக இருக்குமாறு அறிவுரை வழங்கினர். தூத்துக்குடி திரேஸ்புரம், வேம்பார், பெரியதாழை, ஆலந்தலை உள்ளிட்ட பகுதிகளில் தண்டோரா மூலமும் ஒலிப்பெருக்கி மூலமும் புயல் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில், தற்போது 63 இடங்களில் புயல் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதற்காக தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 40 பேர், தமிழ்நாடு பேரிடர் மீட்புக்குழுவைச் சேர்ந்த 40 பேர் தூத்துக்குடியில் முகாமிட்டுள்ளனர். மீட்புப்பணிகளுக்காக 1,400 காவலர்கள், 140 ஊர் காவல்படை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

புயல் கரையைக் கடக்கும் வரையில் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

வங்கக்கடலில் பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டதைத் தொடர்ந்து தூத்துக்குடி துறைமுகத்தில் 6ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: புரெவி புயல்: இராமநாதபுரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.