தூத்துக்குடி: மாவட்டத்தில் கடற்கரை கிராமமான புன்னகாயலில்தான் முதல் முதலில் தமிழ் அச்சுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
சரியாக 1580ஆம் ஆண்டு யாழில் தமிழ் அச்சுக்கூடம் அமைக்கப்பட்டு நூல்கள் அச்சாகியுள்ளன. இதனை ஹென்றி அடிகளால் என்பவர் ஆவணப்படுத்தியுள்ளார். அதேபோல் புன்னக்காயலில் தமிழ் அச்சுக்கூடமிருந்தது என்பதைக் கவிஞர் வைரமுத்து, வரலாற்று ஆய்வாளர்கள் ஆகியோர் உறுதி செய்துள்ளனர்.
எனவே புன்னக்காயலில் முதல் முதலில் தமிழ் அச்சுக்கூடம் இருந்தது என்பதை அரசு ஆவணங்களில் ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி அப்பகுதி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: காக்கிக்குள் ஈரம் - தாய், மனைவிக்கு சிலைகள் அமைத்து 101 லிட்டர் பாலாபிஷேகம் செய்த முன்னாள் காவலர்