ETV Bharat / state

13 நாட்களாக குடிநீர் இல்லை - பொதுமக்கள் சாலை மறியல் - Water issue

தூத்துக்குடி:13 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படாததைக் கண்டித்து தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

protest
author img

By

Published : Jul 31, 2019, 10:36 PM IST

தூத்துக்குடி மாநகராட்சியில் ஏற்பட்டுள்ள திடீர் தண்ணீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டங்களிலும், சாலை மறியலிலும் ஈடுபடுவது அதிகரித்துவருகிறது. இந்நிலையில், 13 நாட்களுக்கு மேலாக புது தெரு பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் கடற்கரை சாலையில் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் திரேஸ்புரம் - தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பின்னர் இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தற்காலிக ஏற்பாடாக டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து விநியோகிக்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பொதுமக்கள் சாலை மறியல்

பின்னர் இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறுகையில், ’தூத்துக்குடி புதுத்தெரு பகுதியில் கடந்த 13 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால், முதியவர்களும், குழந்தைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை செயல்பாடு இருந்த காலத்தில் தூத்துக்குடியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால் தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருந்தும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதை சரிசெய்ய மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Intro:13 நாளாகியும் குடிநீர் வினியோகிக்கப்படாததை கண்டித்து தூத்துக்குடி கடற்கரை சாலையில் பொதுமக்கள் சாலைமறியல்Body:
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியில் ஏற்பட்டுள்ள திடீர் தண்ணீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டங்களிலும், சாலை மறியலிலும் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், 13 நாட்களுக்கு மேலாகியும் தூத்துக்குடி புது தெரு பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து புதுதெரு பகுதி மக்கள் கடற்கரை சாலையில் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் திரேஸ்புரம் - தூத்துக்குடி நகரம் சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தற்காலிக ஏற்பாடாக டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து விநியோகிக்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து ஹன்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தூத்துக்குடி புதுத்தெரு பகுதியில் 13 நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் முதியவர்களும், குழந்தைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சாப்பாடு சமைப்பதற்கு கூட வழியில்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே புது தெரு தொகுதி மக்களுக்கு உடனடியாக தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பிரசித்தா, வாண்டர் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ஸ்டெர்லைட் ஆலை செயல்பாடு இருந்த காலத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் வழங்கியதன் காரணமாக தூத்துக்குடியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால் தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளது. இருப்பினும் தூத்துக்குடி மாநகராட்சியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏன் வந்தது?. எங்கள் பகுதியில் 13 நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட நிலையிலும் தூத்துக்குடியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது என்றால் மாநகராட்சிக்கு வருகிற தண்ணீர் எங்கே எந்த தொழிற்சாலைக்கு விற்கப்படுகிறது. இதற்கு அதிகாரிகள் பதில் சொல்ல வேண்டும். எங்களுக்கு தண்ணீர் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.