தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உட்கோட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராகவும், குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளராகவும் பணிபுரிந்து வருபவர், ஆனந்த தாண்டவம். இவர் மதுரை ஒத்தக்கடை காவல் நிலையத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தபோது அங்கு புகார் கொடுக்க வந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்போது அந்தப்பெண் மதுரை ஐ.ஜி-யிடம் புகார் மனு அளித்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து அவர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கிடையே அந்தப்பெண் கொடுத்த புகார் மீது நடத்தப்பட்ட விசாரணையில் அது உண்மை எனத்தெரியவந்தது.
இது தொடர்பாக தென் மண்டல ஐஜி-யிடம் விசாரணை அலுவலர்கள் அறிக்கை சமர்ப்பித்தனர். அதன் பெயரில் குளத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவத்தை சஸ்பெண்ட் செய்ய தென் மண்டல ஐஜி அதிரடியாக உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் காவல்துறையினர் இடையே பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 15 பேரிடம் விசாரணை - ஏடிஜிபி தகவல்!