தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும், அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் கூறியுள்ளபடி, துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் இன்று (டிச.12) அந்த அமைப்பை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வரவிருப்பதாக தகவல் வெளியானது. இதனால் தூத்துக்குடி - திருநெல்வேலி பிரதான சாலை, விவிடி சிக்னல், போன்ற பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
மேலும், ஆட்சியர் அலுவலகத்திற்கு வருபவர்கள் கடும் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் ஆட்சியர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.
இதையும் படிங்க: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் கூடுதல் நிதி உதவி...