ஸ்ரீவைகுண்டம், புதுக்குடி கீழுர், கீழ புளியங்கா காலனியைச் சேர்ந்த பெருமாள் மகன் சின்னத்துரை (48) என்பவர் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரின் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சின்னத்துரையை கடந்த அக்டோபர் 27ஆம் தேதி கைதுசெய்தனர்.
இந்நிலையில் சின்னதுரை தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் அவரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய அனுமதி கோரி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார். அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஒப்புதல் அளித்ததன்பேரில் சின்னத்துரையை காவல் துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்து சிறையிலடைத்தனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாய்ந்தது குண்டர் சட்டம் - போக்சோ
தூத்துக்குடி: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.