தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் இன்று (நவ.16) கடல் நீர் உள்வாங்கியது.
கோயில்கள் மற்றும் வீடுகளில் குறைபாடுடைய பின்னமான சிலைகளை கடலில் கொண்டு போடுவது வழக்கம். கடல் நீர் அளவு 10 அடிக்கு மேற்பட்டு சற்று குறைந்து இருப்பதால், திருச்செந்தூர் கடலில் போடப்பட்ட கடவுள் உருவமுடைய பின்னமான சிலைகள், நந்தி சிலைகள் போன்றவை வெளியில் தெரிகின்றன.
எனவே, கடற்கரைப் பகுதியில் தெரியும் இந்த பின்னமான சிலைகளை கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆர்வமுடன் அருகில் சென்று பார்த்து வணங்கி வருகின்றனர். மேலும், ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற நாள்களில் இவ்வாறு கடலில் நீர்மட்டம் குறைந்து காணப்படும்போது தென்படும் பின்னமான சிலைகளை முறைப்படி மீட்டெடுத்து பாதுகாத்திட, சிலைத் தடுப்பு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு, அதனை அப்புறப்படுத்தி இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: Goat-களுக்கு ரெயின் கோட் - தஞ்சாவூர் விவசாயி அசத்தல்!