தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தி வருவதாக மக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தியதையடுத்து 2018 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி தமிழக அரசால் மூடப்பட்டது. இந்த ஆலையை மூடியது தொடர்பாக ஆலை நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது,
தற்போது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஓட்டபிடாரம், புதியம்புத்தூர், காயலூரணி, ஒட்டநத்தம், சாமிநத்தம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் வருவாயிழந்து மிகவும் சிரமப்படுகிறோம் எனவும் உடனடியாக ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: ஸ்டெர்லைட் போராளியை ரவுடி பட்டியலில் சேர்த்த காவல் துறை