தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் நீர்வரத்து ஓடை மீட்புக்குழுவினர் குடை பிடித்தபடி, நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அதன்பின்னர் அவர்கள் கோட்டாட்சியர் விஜயாவிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்கப் பணிகள், ஆக்கிரமிப்பு அகற்றம் போன்ற பணிகள் ஊரடங்கு காரணமாக நடைபெற முடியாத நிலையில் உள்ளதாகவும், ஊரடங்கு முடிந்தவுடன் மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலோடு பணி தொடங்கப்படும், குறிப்பாக பணிகள் அனைத்தும் முடிந்த பின்னர் நீர்வரத்து ஆக்கிரமிப்பு அகற்றம் நடைபெறும் என்றும் போராட்டக்காரர்களிடம் உறுத்தியளித்தார்.
இது குறித்து போராட்டக்காரர்கள் தெரிவித்ததாவது, "தற்போது இரண்டு சாலைகளை இணைக்கும் வகையில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பாலம் 20 அடி நீளத்துக்கு அமைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 5 அடி நீளத்துக்கு மட்டுமே பணி நடைபெறுகிறது. இது ஏமாற்று வேலையாக உள்ளது. எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியையும், பாலம் கட்டும் பணிகளையும் மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் நடைபெற வேண்டும்" என்றனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியது