ETV Bharat / state

கிராமங்களுக்கு பேருந்து இல்லாததால் பொதுமக்கள் திடீர் மறியல்!

தூத்துக்குடி: கிராமப்புற வழித்தடங்களில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நிறுத்தப்படுவதால் கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

strike
author img

By

Published : Aug 5, 2019, 7:06 AM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள டி.சண்முகபுரத்திற்கு கோவில்பட்டியில் இருந்து கீழஈரால், விஜயாபுரி, கசவன்குன்று, செமபுதூர் வழியாக அரசுப் பேருந்து ஒன்றும், எட்டயபுரத்தில் இருந்து ராசப்பட்டிக்கு ஒரு அரசுப் பேருந்தும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ச்சியாக நிறுத்தப்படுவதால் அப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனையடுத்து, அவர்கள் கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Intro:கோவில்பட்டி பஸ் நிலையத்தில் பொதுமக்கள் சாலைமறியல்Body:
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகேயுள்ள டி.சண்முகபுரத்திற்கு கோவில்பட்டியில் இருந்து கீழஈரால், விஜயாபுரி, கசவன்குன்று, செமபுதூர் வழியாக அரசு பஸ் ஒன்றும், எட்டயபுரத்தில் இருந்து ராசப்பட்டிக்கு ஒரு அரசு பஸ்சும் இயக்கப்பட்டு வருகிறது.இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 2 அரசு பஸ்களும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ச்சியாக நிறுத்தப்படுவதால் இந்த வழித்தடத்தில் உள்ள கிராமங்களுக்கு செல்லக்கூடிய பொது மக்கள்,வியாபாரிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் கோவில்பட்டி பஸ் நிலையத்தில் டி.சண்முகபுரத்திற்கு செல்லும் பஸ்க்காக காத்து இருந்தனர். ஆனால் மதியம் ஒன்றை மணிக்கு வரவேண்டிய பஸ் வெகு நேரமாக வராத காரணத்தினால் ஆத்திரமடைந்த மக்கள் கோவில்பட்டி பஸ் நிலையத்திற்குள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ஐயப்பன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தி;ல் ஈடுபட்ட மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, டி.சண்முகபுரத்திற்கு அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுத்தனர். இதையெடுத்து பொது மக்கள் தங்கள் போராட்டத்தினை கைவிட்டனர். இதனால் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கோவில்பட்டியில் இருந்து கிராமபுற வழிதடங்களில் இயக்கப்படும் அரசு பஸ்கள், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் மற்றபகுதிகளுக்கு சிறப்பு பஸ்களாக மாற்றி இயக்கப்படுவதால் கிராமங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தொடர்ச்சியாக கிராமபுற வழித்தடங்கள் இயக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.