ETV Bharat / state

கரோனா சூழலில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்கள் - உதவும் தனியார் பேருந்து நிறுவனம்

தூத்துக்குடி: ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கோவில்பட்டியில் 7 பேருந்துகளை இலவசமாக தனியார் பேருந்து நிறுவனம் இயக்கி வருகிறது.

Aided Private Bus Company
Aided Private Bus Company
author img

By

Published : Jun 14, 2020, 12:49 PM IST

தூத்துக்குடி கோவில்பட்டியில் எஸ். எஸ். ஆர். பி.எஸ். எனும் தனியார் பேருந்து போக்குவரத்து நிறுவனம் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கோவில்பட்டியிலிருந்து திருநெல்வேலி, கழுகுமலை, சங்கரன்கோவில், புளியங்குடி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில், இன்று முதல் லாக் டவுன் காலம் முடியும் வரை தங்களது பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு இலவசமாக போக்குவரத்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து பேருந்து நிறுவன உரிமையாளர் ஸ்ரீதர் கூறுகையில், “கரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மக்கள் மிகவும் நலிந்த நிலையில் உள்ளனர். ஆகவே மக்களுக்கு உதவிடும் வகையில் அவர்களது பொருளாதார சிரமத்தை கருத்தில் கொண்டு இன்று முதல் எங்களது நிறுவனத்தின் பேருந்துகள் மூலம் கழுகுமலை, சங்கரன்கோவில், புளியங்குடி, தென்காசி உள்ளிட்ட வழித்தடங்களில் இலவசமாக போக்குவரத்து சேவையை தொடங்கியுள்ளோம். இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டாலும், மக்களுக்காக இந்த உதவியை மன நிறைவுடன் செய்கிறோம்” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.