ETV Bharat / state

‘தமிழ்நாட்டில் ரூ.12 லட்சம் கோடி கடன் இருக்கிறது; இந்த நிலை தொடர்ந்தால் தமிழ்நாடு திவால் ஆகிவிடும்’ - அன்புமணி ராமதாஸ் காட்டம்! - அண்ணாமலை நடைபயணம்

என்எல்சி விவகாரம் தொடர்பாக நேற்று பார்த்தது ஒரு சாம்பிள் தான், இதற்கு பின்பு தான் இருக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

‘இந்த நிலை தொடர்ந்தால் தமிழ்நாடு திவால் ஆகிவிடும்’ - அன்புமணி ராமதாஸ் காட்டம்!

author img

By

Published : Jul 29, 2023, 10:38 PM IST

‘இந்த நிலை தொடர்ந்தால் தமிழ்நாடு திவால் ஆகிவிடும்’ - அன்புமணி ராமதாஸ் காட்டம்!

தூத்துக்குடி: திருநெல்வேலியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஜூலை 29) சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தார். அப்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தென் மாவட்டங்கள் வளர இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தர வேண்டும் என போராடியும், பல வகையில் அழுத்தங்கள் கொடுத்ததன் காரணமாக 2000 ஆம் ஆண்டில் திமுக ஆட்சி காலத்தில் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தை தொடங்கினர்.

இதன் மூலம் அதிகப்படியான மக்களுக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது வளர்ச்சி அடையவில்லை. இந்த நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 25 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக கிட்டத்தட்ட 2 லட்சம் பேருக்கும் வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை செய்கின்ற எண்ணம் திமுகவிற்கு இல்லை எனவும்” அவர் கூறினார்.

ஸ்டெர்லைட்டை விட 100 மடங்கு அதிக பாதிப்பு கொடுக்கிறது என்எல்சி: “நெய்வேலியில் நடந்த போராட்டம் விவசாயிகளுக்கு ஆதரவான ஒரு போராட்டம், அவருடைய உரிமைகளை பெறுகின்ற வகையில் போராட்டம் நடத்தியதற்கு காவல் துறையை ஏவி விட்டு ஒரு பதட்டமான சூழ்நிலை உருவாக்கப்பட்டது.

மேற்கு வங்கத்தில் விவசாயிகளுக்கு எதிரான ஒரு போக்கு அன்று கம்யூனிஸ்ட் கட்சியினர் செய்த காரியத்தால் அவர்கள் ஆட்சி அகற்றப்பட்டது. நெய்வேலியில் நடப்பது விவசாயிகளுக்கு எதிரானது மட்டுமல்ல, தமிழ் சமுதாயத்திற்கு, தமிழ்நாட்டிற்கு எதிரானது” என எச்சரித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “விவசாயத்தை அழித்துவிட்டு நிலங்களை அழித்தால் வளர்ச்சி வந்து விடுமா என கேள்வி எழுப்பிய அவர், என்எல்சிக்காக நிலங்களை கையகப்படுத்துவதை ரத்து செய்ய வேண்டும். நேற்று பார்த்தது ஒரு சாம்பிள் தான், இதற்கு பின்பு தான் இருக்கிறது, மண்ணுக்கும், மக்களுக்கும் போராடுவதற்கு நாங்கள் தயார் நிலையில் உள்ளோம். நாங்கள் சொன்னால் என் பின்னாடி கோடிக்கணக்கான இளைஞர்கள், விவசாயிகள் உள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தால் அப்பகுதி மாசு ஏர்பட்டதையடுத்து கடுமையான போராட்டத்திர்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த ஸ்டெர்லைட்டை விட 100 மடங்கு என்எல்சி அதிக பாதிப்பு கொடுக்கிறது. என்எல்சி நிலம் கையக்கப்படுத்தினால் இரண்டு மூன்று ஆண்டுகளில் அரிசி 500 ரூபாய்க்கு கிடைக்கப் போகிறது. சென்னை உயர் நீதிமன்ற நீதி அரசர் நிலத்தை அழித்ததால் தனக்கு கண்ணீர் வந்தது என்றும், சோறு கிடைக்காது என்று நீதிபதி கூறியும் இன்று மறுபடியும் வேலையை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தரிசு நிலத்திற்காக போரடிய அண்ணாமலைக்கு இங்கு என்ன பிரச்சனை: நிலக்கரி பயன்பாட்டை குறைப்பதற்கு ஒரு மாநாட்டை ஜி-20 சுற்றுச்சூழல் அமைச்சர்கள் நடத்துகிர நிலையில் பக்கத்தில் 150 கிலோ மீட்டரில் நிலக்கரிக்காக நிலங்களை அழிக்கிற நோக்கத்தோடு திமுக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக மாறிவிட்டது என்று முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கூறியுள்ளனர். வெளி மாநிலத்தில் மின்சாரத்தை விற்று கொண்டிருக்கின்றோம் என்றால் எதற்கு நிலத்தை அழிக்கின்றோம் என கேள்வி எழுப்பிய அவர் என்எல்சி நிறுவனத்தின் பயன்பாடு முடிந்து விட்டது. அமைதியாக இருந்த போராட்டத்தை வேண்டுமென்றே தூண்டிவிட்டு கலவரம் போன்ற ஒரு சூழலை காவல் துறை உருவாக்கியது” என்றார்.

தொடர்ந்து, அங்கு பயிர்களை அழித்தது தவறு, இருந்தாலும் இந்த பணியை நிறுத்துவது தவறு என்று அண்ணாமலை கூறியது பற்றி எழுப்பிய கேள்விக்கு, “வட இந்தியர்கள் 5 ஏக்கரில் வீடு கட்டி இருக்கிறார்கள். அங்கு போய் பாத்திரம் கழுவுவது தமிழர்கள், துணியை துவைப்பது தமிழர்கள், காய்கறி வாங்கி கொடுப்பது தமிழர்கள், வீடு துடைத்து பெருக்குவது தமிழர்கள், இந்த வேலையைத்தான் அண்ணாமலை கூறுகின்றாரா” என பதில் அளித்தார்.

அன்னுரில் சிப்காட்டுக்கு 3000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டார்கள், அங்கு தரிசி நிலம் தண்ணி 800 அடி 1,000 அடிக்கு போய் விவசாயம் பண்ண முடியாத நிலத்தை எதிர்த்து அண்ணாமலை, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி போராடினார். அப்படிப்பட்ட அண்ணாமலைக்கு இங்கு என்ன பிரச்னை? என கேள்வி எழுப்பியுள்ளார்.

“ஆண்டுதோறும் 15 டிஎம்சி நீர் கடலில் போய் சேர்கிறது. தாமிரபரணி, நம்பியாரு, கருமேனியாறு, போன்ற ஆறுகளை இணைக்க வேண்டும். 2007 இல் இருந்து போராடுகிறோம். இன்னும் அதற்கு அரசாங்கம் தீர்வளிக்கவில்லை” என கூறினார்.

தமிழ்நாட்டில் இந்த நிலை தொடர்ந்தால் தமிழ்நாடு திவால் ஆகிவிடும்: “கடந்த ஓராண்டு மட்டும் தமிழக அரசு பெற்ற கடன் ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி, ரூபாய் அதிலே 51 ஆயிரம் கோடி ரூபாய் கடந்த கால கடனையும், வட்டிக்காக திரும்ப கொடுக்க கடன் வாங்கி இருக்கிறார்கள். அண்ணா திமுக கடன் வாங்குவதாக குறை சொன்னவர்கள் ஏன் கடனை வாங்குகிறீர்கள்” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர், “தமிழ்நாட்டின் மொத்த கடன் 12 லட்சத்து 53 ஆயிரம் கோடி. அதில் பொதுத்துறை கடன் 4 லட்சம் கோடி, நிர்வாக துறை கடன் ஏழே கால் லட்சம் கோடி. இரண்டும் சேர்த்தால் தோராயமாக 12 லட்சம் கோடி கடன் இருக்கின்ற தமிழ்நாட்டில் இந்த நிலை தொடர்ந்தால் தமிழ்நாடு திவால் ஆகிவிடும் எனவும் இதனை தங்கம் தென்னரசு சரி செய்ய வேண்டும்” என கூறினார். அதனை தொடர்ந்து அண்ணாமலை நடைபயணம் வெற்றி பெற தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதையும் படிங்க: "பாத யாத்திரை அல்ல;பாவ யாத்திரை" - அமித்ஷா, அண்ணாமலையை விமர்சித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.