ETV Bharat / state

திரையரங்குகள் திறப்பிற்கு பின் பார்த்துதான் விழாக்கால அனுமதி வழங்க முடியும் -அமைச்சர் கடம்பூர் ராஜு

தூத்துக்குடி: திரையரங்குகள் திறக்கப்பட்ட பின் சூழ்நிலையை பொறுத்து விழாக்கால சிறப்பு அனுமதி வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

திரையரங்குகள் திறப்பிற்கு பின் பார்த்துதான் விழாக்கால அனுமதி வழங்க முடியும் -அமைச்சர் கடம்பூர் ராஜு
திரையரங்குகள் திறப்பிற்கு பின் பார்த்துதான் விழாக்கால அனுமதி வழங்க முடியும் -அமைச்சர் கடம்பூர் ராஜு
author img

By

Published : Oct 23, 2020, 1:49 PM IST

சீறாப்புராணம் காப்பியம் தந்த தமிழறிஞர் அமுதகவி உமறுப்புலவரின் 378ஆவது ஆண்டு பிறந்த தின விழா அரசு சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் உள்ள அவரது நினைவு மணிமண்டபம் வளாகத்தில் இன்று (அக். 23) நடைபெற்றது. நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, உமறுப்புலவர் சங்க தலைவர் காஜா மைதீன், அரசுத்துறை அலுவலர்கள், இஸ்லாமிய பெருமக்கள் கலந்துகொண்டு உமறுப்புலவரின் நினைவிடத்தில் மலர் போர்வை சாத்தி புகழ் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, “நடிகர்கள் சம்பளத்தை குறைப்பது அவர்களாக முடிவு செய்ய வேண்டிய விஷயம். அரசு இதில் நேரடியாக தலையிட்டு கூறுவதற்கு முகாந்திரம் இல்லை. தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், நடிகர் சங்கத்தினர் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னர் அங்குள்ள சூழ்நிலையை பொறுத்து விழாக்கால சிறப்பு அனுமதி வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.

அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி

மேலும், கரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விரைவில் நடைமுறைக்கு வரும் என்ற தகவல் வந்தவுடன் இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில்தான் அனைவருக்கும் விலையில்லாமல் தடுப்பூசி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார் என்றும் ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் இதிலும் அரசியல் செய்கிறார் எனக் குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க...தேவர் தங்கக் கவசத்தை உறவினர்களிடம் ஒப்படைத்த ஓபிஎஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.