ETV Bharat / state

'காதல் கணவரை மீட்டுத் தாருங்கள்' - ஆர்டிஓ காலில் விழுந்து கதறிய இளம்பெண்! - இளம்பெண்

தூத்துக்குடி: கோவில்பட்டி கோட்டாட்சியர் காலில் விழுந்து, தனது காதல் கணவரை மீட்டுத் தருமாறு இளம்பெண் ஒருவர் கோரிக்கை மனுவை வழங்கி கதறி அழுதார்.

one young girl to fall on the feet of RDO for rescue her husband
author img

By

Published : Oct 10, 2019, 4:41 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சுந்தரலிங்கபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகள் உமாமகேஸ்வரி (18). இவர், கோவில்பட்டியில் உள்ள தனியார் லேப் டெக்னீசியன் மையத்தில் படித்து வருகிறார். அவரது வீட்டுக்கு அருகில் விருதுநகர் மாவட்டம் சிவனாந்தபுரத்தைச் சேர்ந்த ராஜாமூர்த்தி குடியிருந்து வருகிறார். ராஜாமூர்த்தி வேளாண்மைத் துறையில் பணியாற்றி வருகிறார்.

இதனிடையே அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ராஜாமூர்த்திக்கும் உமாமகேஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் ஆறு மாத காலமாக காதலித்து வந்தார்கள். இந்நிலையில் கடந்த செப்டம்டர் 23ஆம் தேதி இரு வீட்டாருக்கும் தெரியாமல் உமா மகேஸ்வரியும் ராஜாமூர்த்தியும் திருமணம் செய்துள்ளனர். தனது வீட்டில் உள்ளவர்களிடம் பேசி, ஒரு மாதத்திற்குள் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக உமாவிடம் ராஜா வாக்கு கொடுத்துள்ளார்.

ஆனால், இவர்கள் இருவரும் திருமணம் செய்த தகவல் ராஜாமூர்த்தியின் உறவினரான பவுன்ராஜுக்கு (ஓய்வுபெற்ற காவல் துறை துணைக் கண்காணிப்பாளர்) தெரிய வந்துள்ளது. இதையடுத்து, ராஜாமூர்த்தியை அடித்து இழுத்துச் சென்றுள்ளார். அழைத்துச் செல்லும்போது உமாமகேஸ்வரியின் குடும்பத்தினரையும் மிரட்டி விட்டுச் சென்றுள்ளார். இதன்பிறகே, காதல் தம்பதியின் வீட்டார்களுக்குத் திருமணம் செய்துகொண்ட தகவல் தெரிந்துள்ளது.

தகவலறிந்த உமா வீட்டார் கோவில்பட்டியிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று ராஜாமூர்த்தியை, மீட்டுத் தரும்படி காவல் துறை ஆய்வாளாரிடம் மனு கொடுக்கச் சென்றுள்ளனர். அவர் மனுவை வாங்காமல் உமாமகேஸ்வரியை தரக்குறைவாகத் திட்டியதோடு மட்டுமில்லாமல் கன்னத்தில் அறையும் கொடுத்துள்ளார்.

கோட்டாட்சியரின் காலில் விழுந்து மனு வழங்கிய இளம்பெண்

இதனால் ஏமாற்றமடைந்த உமாமகேஸ்வரி தனது உறவினர்களுடன் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து, கோட்டாட்சியர் விஜயாவிடம் கணவரை மீட்டுத் தரக்கோரி மனு கொடுத்தார். அப்போது அவர் காலில் விழுந்து தனது காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கூறி கதறி அழுதார். மனுவைப் பெற்றுகொண்ட கோட்டாட்சியர் தகுந்த நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். மேலும், தவறாக நடந்துகொண்ட காவல் துறை ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதையும் படிங்க: 'முகநூல் காதல்' - 35 வயது பெண்ணுடன் எஸ்கேப் ஆன 20 வயது இளைஞர்!

Intro:கோவில்பட்டியில்
காதல் கனவரை சேர்த்து வைக்ககோரி
கோட்டாட்சியர் காலில் விழுந்து கதறி அழுத இளம்பெண்
Body:
தூத்துக்குடி

தூத்தக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஆவல்நத்தம் ஊராட்சி ஓன்றியத்திற்கு உட்பட்ட சுந்தரலிங்கபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகள் உமாமகேஸ்வரி(18) இவர் கோவில்பட்டியில் தனியார் லேப் டெக்னிசன் மையத்தில் படித்து வருகிறார். இவரது வீட்டுக்கு அருகில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலூகாவிற்கு உட்பட்ட சிவனைந்தபுரத்தைச் சேர்ந்த ராhழூர்த்தி குடியிருந்து வருகிறார் ராஜாமுர்த்தி சங்கரண்கோவில் உள்ள விவசாயதுறையில் பணியாற்றி வருகிறார்.

தினமும் தனது ஊரில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் நடந்து சென்று பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ் ஏறுவது வழக்கம் அப்போது ராஜாமுர்த்திக்கு உமாமகேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த 6 மாதகாலமாக காதலித்து வந்தார்கள் இந்நிலையில் கடந்த 23.9.19 அன்று சங்கரன்கோவில் உள்ள பெருமாள் கோவிலில் வைத்து உமாமகேஸ்வரியை திருமணம் செய்து உள்ளார் பின்னர் தனது வீட்டியில் உள்ளவர்களிடம் பேசி ஓரு மாதத்திற்குள் தனது வீட்டிற்கு ஆழைத்து செல்வதாக கூறி உள்ளார் .இந்நிலையில் ராஜாமுர்த்தி உறவினரான பவுன்ராஜ்(ஓய்வு பெற்ற காவல்துறை துணைகண்காணிப்பாளர்) ராஜாமுர்த்தி ஆழைத்து கொண்டு சென்று உள்ளார். ஆழைத்து செல்லும் போது உமாமகேஸ்வரி குடும்பத்திரை மிரட்டிவிட்டு சென்ற உள்ளார். பின்னர் கோவில்பட்டி உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று தனது கனவரை மீட்டி தரும்படி காவல் துறை ஆய்வாளார் பத்மாசினிவாசன்யிடம் மனு கொடுக்க சென்று உள்ளனர். மனுவை வாங்காமல் உமாமகேஸ்வரியை தரக்குறைவாக திட்டி அனுப்பி உள்ளார். இதனால் ஆதிருப்பதிடைந்த உமாமகேஸ்வரி தனது உறவினர்களுடன் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து கோட்டாட்சியர் விஜயாவிடம் மனு கொடுத்துவிட்டு காலில் விழுந்து தனது காதல் கனவரை தன்னுடன் சேர்ந்து வைக்குமாறு கோரி கதறி அழுதார். மனுவைப் பெற்றுகொண்ட கோட்டாட்சியர் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனால் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பேட்டி: உமாமகேஸ்வரி, மாரியப்பன் (தந்தை)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.