தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் நேற்றிரவு சாலைப்புதூர் விலக்கு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.
அப்போது நாகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார், எதிர்பாராவிதமாக முதியோர் மீது மோதி சாலையின் தடுப்பின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலையைக் கடக்க முயன்ற ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் காரை ஓட்டிவந்த நாகர்கோவிலைச் சேர்ந்த கிறிஸ்துராஜ், அவரது மனைவி ராஜம், மகள் ரெஜிதா, உறவினர் மேரி ஆகியோரும் படுகாயமடைந்தனர். பின்னர், அவர்களை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ராமகிருஷ்ணனை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வெடி விபத்தில் காயமடைந்த மூதாட்டிக்கு உரிய நிவராணம் கிடைக்குமா?