ETV Bharat / state

ஆயுதப்படை காவலர் குடும்பத்தினருக்கு புதிய ஆம்புலன்ஸ் சேவை! - Armed Forces

தூத்துக்குடியில் ஆயுதப்படை காவலர்களின் குடும்பத்தினருக்கு புதிய ஆம்புலன்ஸ் சேவையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

புதிய ஆம்புலன்ஸ் சேவை
புதிய ஆம்புலன்ஸ் சேவை
author img

By

Published : Dec 19, 2020, 8:35 PM IST

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவலர் குடியிருப்பு 3ஆவது மைல் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் 392 வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் காவலர்கள் குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 1500 முதல் 2000 பேர் வரை வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அவசர மருத்துவ உதவிக்கு வெகு தொலைவிலிருந்து தான் ஆம்புலன்ஸ் கிடைக்கிறது.

இது குறித்து காவலர்களின் குடும்பத்தினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்ட ஆம்புலன்ஸ் நிர்வாக மேலாளர் மூலமாக முதலுதவி சிகிச்சை உபகரணங்கள், மருத்துவ அலுவலர்கள் அடங்கிய புதிய ஆம்புலன்ஸ் வாகனம் ஆயுதப்படை குடியிருப்பில் 24 மணி நேரமும் தயார் நிலையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் காவலர் குடியிருப்புகள் மட்டுமல்லாது, இப்பகுதி பொதுமக்களும் பயன்பெறும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஆம்புலன்ஸ் வாகனத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் ஆயுதப்படை குடியிருப்பில் கழிவுநீர் தேங்குவதை அகற்றுவதற்காக ஆயுதப்படை குடியிருப்பில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். பின்னர், வீட்டை சுத்தமாக பராமரிப்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக காவலர் ரமேஷ் குமாருக்கு முதல் பரிசும், காவலர் மயிலேரிக்கு 2ஆவது பரிசும், தலைமைக் காவலர் தஸ்நேவிலுக்கு 3ஆவது பரிசும் வழங்கி பாராட்டினார்.

இதையும் படிங்க: திருச்சியில் ரேஷன் கடையை திறந்து வைத்த எம்எல்ஏ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.