தூத்துக்குடியில் மத்திய அரசின் மக்கள் விரோதப்போக்கை கண்டித்து தூத்துக்குடி மண்டல நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் வேல்ராசு தலைமையில் அதன் நிர்வாகிகள் அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து அவர்கள், ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து மனு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ”மத்திய அரசு தொடர்ந்து மக்கள் விரோதப் போக்கினை கடைப்பிடித்து வருகிறது. சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய வகையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு 2020 வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இதுபோல மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி உள்ளது. மேலும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் தேசிய மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை அறிமுகப்படுத்தி மீனவர்களின் வாழ்வாதாரங்களையும் அழிக்க நினைக்கிறது.
மத்திய அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கைகளை நாம் தமிழர் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். உடனடியாக மக்கள் விரோத சட்டத் திருத்தங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இதனை மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளோம்” என்றார்.
மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரைவு
தூத்துக்குடி : மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.