தூத்துக்குடி மாவட்டம், சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக வேல்ராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேல்ராஜ், தனது வேட்புமனுவினை, தேர்தல் நடத்தும் அலுவலரான சிம்ரன்ஜித் சிங் கலோனிடம் இன்று (மார்ச்.17) தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளருடன் அவருடைய மனைவி இந்திரா, மகன் சமரன், மற்றும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி ஆகியோருடன் வந்திருந்தனர். முன்னதாக நாம் தமிழர் கட்சியினர் தூத்துக்குடி மூன்றாம் மைல் பாலம் அருகேயுள்ள, முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்ட நாம் தமிழர் கட்சியினர், தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிம்ரன்ஜித் சிங் கலோனை சந்தித்து வேட்புமனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பனாரஸ் இந்து பல்கலைக்கழகப் பேராசிரியராக நீடா அம்பானி நியமிக்கப்பட்டாரா - உண்மை என்ன?