தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 12ஆவது வார்டு புது சாலை மிகவும் பிரதான சாலையாக இருந்து வருகிறது. நாள்தோறும் இரு சக்கரம், கார், கனரக வாகனங்கள் என லட்சக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையை கடக்கின்றன. இந்த சாலையின் ஓரம் கழிவுநீர் கால்வாய் ஓடை சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
மருத்துவமனை, தொழிற்சாலை மற்றும் குடியிருப்புப்பகுதிகளில் வெளியேறும் கழிவு நீர் என பிரதான கழிவு நீர் ஓடையாக இருந்துவரும் அப்பகுதியில் தற்போது எந்த ஒரு முன்னேற்பாடும் இல்லாமல் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அவ்வழியாக செல்லக்கூடிய கழிவுநீர், சாலை வழியாக வெளியேறி குளம் போல் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.
நாள்தோறும் அப்பகுதி வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் அரசு அலுவலகம் செல்லக் கூடியவர்கள் நீண்டநாட்களாக நடைபெற்று வரும் இப்பணியின் காரணமாக கழிவுநீர் சாலையில் தேங்கிக்கிடப்பதால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
மற்றும் ஆறு மாறி செல்வதால் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாமலும் தொற்றுப் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது . இதுகுறித்து நகராட்சியிடமும் நெடுஞ்சாலைத்துறையிடமும் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கப்படவில்லை; எனவே நகராட்சி நிர்வாகம் மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு தொற்றுப்பரவும் அபாயத்தைத் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பள்ளி சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர்... பொதுமக்கள் தர்மஅடி!