ETV Bharat / state

’தூத்துக்குடியில் 2000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவர்’ - தூத்துக்குடி அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி: வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர் என காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்

author img

By

Published : Apr 29, 2021, 7:18 AM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் செந்தில்ராஜ், காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் நேற்று (ஏப்.28) ஆய்வு நடத்தினர். அதன் பின்னர் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் எல்லை பாதுகாப்பு படையினரும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றிலும், வெளிப்புறத்திலும் ஆயுதப்படை காவலர்கள், சட்டம் ஒழுங்கு காவலர்கள் பணியில் ஈடுபடுவார்கள்.

அன்றைய தினம் அரசியல் கட்சிகளின் வெற்றி கொண்டாட்டங்கள் தேர்தல் ஆணையத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே வெற்றி பெறும் அரசியல் கட்சியினர் எவ்வித கொண்டாட்டங்களிலும் ஈடுபடக் கூடாது. மீறினால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.

செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்

ஸ்டெர்லைட் விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுக்கப்படும். உச்சநீதிமன்றம் கூறியுள்ள தீர்ப்பு குறித்து எதிர்ப்பாளர்களுக்கு தகுந்த விளக்கங்கள் அளிக்கப்படும். எ

னவே எதிர்ப்பாளர்கள், பொதுமக்கள் யாரும் போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்த்து சட்டரீதியாக அணுகி தீர்வுகாண முயற்சிக்கலாம்” என்றார்.

இதையும் படிங்க : 'தபால் வாக்குகள் எண்ணிக்கையில் குழப்பமான சூழல் நிலவுகிறது' திமுக புகார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.