தூத்துக்குடி சாத்தான்குளத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு சந்தேகத்திற்கிடமான முறையில் வணிகர்கள் இருவர் உயிரிழந்தனர். இவர்களைக் காவல் துறையினர் அடித்துக்கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. இச்சூழலில் நேற்று #JUSTICEFORJAYARAJANDBENNIX என்ற ஹாஸ்டாக் ட்ரெண்டானது.
இதைத் தொடர்ந்து அதே தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறையினர் தாக்கியதால் மனமுடைந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் மரணத்திற்கு நீதி கிடைக்காத நிலையில், எட்டயபுரம் கட்டடத் தொழிலாளி கணேசமூர்த்தி காவல் துறையினரால் தாக்கப்பட்டு மனமுடைந்து தற்கொலை செய்துள்ளார். உயிர்குடிக்கும் மாவட்டமாக தூத்துக்குடி மாறிவருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அப்பாவி மக்களைக் காப்பாற்றாமல் தவறு செய்பவர்களைக் காப்பாற்றுகிறாரா முதலமைச்சர், என்று கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: காவல் துறையினர் தாக்குதல்: இளைஞர் மனமுடைந்து தற்கொலை