ETV Bharat / state

''திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் விரைவில் கும்பாபிஷேகம்'' - அமைச்சர் சேகர்பாபு! - திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில்

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் அனைத்து திருப்பணிகளும் மூன்றாண்டுகளில் முடிவடைந்து மகா கும்பாபிஷேகம் நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு

author img

By

Published : Apr 26, 2023, 10:28 PM IST

‘திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்’ - அமைச்சர் சேகர்பாபு!

தூத்துக்குடி: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனியார் பங்களிப்புடன் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டப்பணிகளை முதலமைச்சர் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோயிலின் கும்பாபிஷேகப் பணிகளும் தொடங்கியுள்ளன. திருக்கோயிலின் ராஜகோபுரத்திற்கு திருப்பணி செய்யும் பணிகள் இன்று (ஏப்.26) தொடங்கியது. ராஜகோபுரத்தின் கீழ் பகுதியில் பாலாலயம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பாலாலயம் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து அமைச்சர்கள் பந்தல்கால் நட்டினார்கள். பின், சரவணப் பொய்கையில் அமைக்கப்பட்டுள்ள யானை குளியல் தொட்டியின் திறப்பு விழா நடைபெற்றது.

திருச்செந்தூர் கோயிலில் உள்ள யானை தெய்வானை குளியல் தொட்டியில் இறங்கி உற்சாகமாக குளியல் போட்டது. மேலும் அங்கு அமைக்கப்பட்ட உள்ள ஷவரிலும் குளித்து மகிழ்ந்தது. இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், “அறநிலையத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் சுமார் 300 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளில் ராஜ கோபுர திருப்பணி பணிகள் இன்று ( ஏப்.26 ) தொடங்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோயிலில் மூன்று கட்டமாக மெகாத் திட்டப்பணிகள் இந்த அனைத்து திட்டப்பணிகளும் மூன்று ஆண்டுக்குள் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடத்தப்படும்’’ எனத் தெரிவித்தார். மேலும், ''திருச்செந்தூர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடல் வரை செல்வதற்கான பாதைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நிதியமைச்சர் மாற்றமா? மே இரண்டாம் வாரத்தில் திமுக அமைச்சரவையில் மாற்றமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.