ETV Bharat / state

ஊழல் குற்றச்சாட்டில் திமுகவினர் சிறைக்கு செல்லாமல் இருந்தாலே போதும்: ஸ்டாலின் பேச்சுக்கு அமைச்சர் பதிலடி!

author img

By

Published : Oct 12, 2019, 7:32 PM IST

தூத்துக்குடி: ஊழல் குற்றச்சாட்டுகளால் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறைக்கு சென்று, தேர்தல் வரக்கூடிய வாய்ப்புகள் உள்ளது என ஸ்டாலின் பேச்சுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார்.

கடம்பூர் ராஜு

தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைக்காக 2 நாட்கள் பயணமாக முதலமைச்சர் பழனிசாமி நாளை தூத்துக்குடி வருகிறார். நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவுள்ளது. நாங்குநேரி தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகளுக்கும் மேலான வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றிபெறுவார்.

அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர் சந்திப்பு
சீன அதிபரின் வருகை தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறது. திமுக ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை, நாங்கள் சிறைக்கு செல்லப்போவதும் இல்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு இன்னும் முடியவில்லை. நீதிமன்ற விசாரணையில் உள்ளது. ஆகவே ராசா, கனிமொழி உள்பட 5 நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் விரைவில் பறிபோகக் கூடிய நிலையில் இருக்கிறது. அதனால் அந்த தொகுதிகள் காலியாகி தேர்தல் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஊழல் வழக்கில் திமுகவினர் சிறைக்குச் செல்லாமல் இருந்தாலே போதும். ஸ்டாலின் கனவு ஒருபோதும் நிறைவேறாது. அவருடைய முதலமைச்சர் கனவு, கனவாகவே போகும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே: ஆட்சி மாறும் மறுநாளே முதலமைச்சர், அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி'

Intro:ஊழல் குற்றச்சாட்டில் திமுகவினர் சிறைக்கு செல்லாமல் இருந்தாலே போதும் - மு.க. பேச்சுக்கு பதிலளித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டிBody:
தூத்துக்குடி

தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,
நாங்குநேரிதொகுதி இடைத்தேர்தலுக்காக 2 நாட்கள் பிரச்சார பயணமாக நாளை தமிழக முதல்வர் தூத்துக்குடி வருகிறார். நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் என்பது புகுத்தப்பட்டிருக்கிறது. நாங்குநேரியில் உள்ளூர் வேட்பாளரை நாங்கள் நிறுத்தி இருப்பது மக்கள்மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் குளம், ஊரூணிகளை தூர்வாரும் குடிமராமத்து பணித்திட்டம் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. நாங்குநேரி தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகளுக்கும் மேலான வித்நியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றிபெறுவார்.

சீன அதிபரின் வருகை தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறது. திமுக ஆட்சிக்கு வரப் போவதும் நாங்கள் சிறைக்கு செல்லப்போவதும் இல்லை. 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு இன்னும் முடியவில்லை. நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. ஆகவே தயாநிதி, ராசா, கனிமொழி உள்பட 5 நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் விரைவில் பறிப்போக கூடிய நிலை உள்ளது. தொகுதிகள் காலியாகி தேர்தல் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஊழல் வழக்கில் திமுகவினர் சிறைக்குச் செல்லாமல் இருந்தாலே போதும்.
ஸ்டாலின் கனவு ஒருபோதும் நிறைவேறாது. எப்போதும் போல அவரின் முதலமைச்சர் கனவு, கனவாகவே போகும். திமுகதான், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டவற்றுக்கு பணம் கொடுத்து அதன் அடிப்படையில் ஒப்பந்த கூட்டணி அமைத்துள்ளது என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.