ETV Bharat / state

முதலமைச்சர் வேட்பாளர், சசிகலா வருகை குறித்து பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி: அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் அம்சங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலளித்துள்ளார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ
அமைச்சர் கடம்பூர் ராஜூ
author img

By

Published : Sep 27, 2020, 9:23 PM IST

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் 116ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் முன்பு அமைக்கப்பட்ட பந்தலில் வைக்கப்பட்டிருந்த சி.பா.ஆதித்தனார் உருவப்படத்துக்கு மாநில செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், விளாத்திகுளம் எம்.எல்.ஏ சின்னப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, "பள்ளிக் கல்வித்துறையில் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. அனைத்துப் பிரச்னைகளிலும் உண்டாக்கப்படுவது போல இந்த விஷயத்திலும் கருத்து வேற்றுமை இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர். மாணவர்கள் சந்தேகம் கேட்பதற்காக மட்டுமே,‌ பெற்றோர் சம்மதத்துடன் பள்ளிக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு பற்றி முதலமைச்சர் உரிய நேரத்தில் முடிவு எடுப்பார்.

விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு நினைவு மண்டபம் அமைப்பது மற்றும் பாரத ரத்னா விருது பற்றி முதலமைச்சர் தகுந்த முடிவெடுப்பார். அமைச்சர்கள் டெல்லி செல்வதற்கும் அதிமுக செயற்குழுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. துறை ரீதியாக அமைச்சர்கள் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை பார்ப்பது வழக்கமான ஒன்றுதான்.

திரையரங்குகளை திறப்பது பற்றி மத்திய தகவல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளேன். அனுமதி கொடுத்ததும் துறை ரீதியாக டெல்லி செல்ல உள்ளேன்"எனத் தெரிவித்தார்.

அதிமுக செயற்குழுவில் முதலமைச்சர் வேட்பாளர், சசிகலா வருகை குறித்து விவாதிக்கப்படுமா என்ற கேள்விக்கு செயற்குழு கூட்டத்திற்கு முன்னர் அதில் விவாதிக்கப்படும் அம்சங்கள் குறித்து வெளியில் கருத்து சொல்வது சரியாக இருக்காது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மறைவு: ஆளுநர் பன்வாரிலால் இரங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.