தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 98ஆம் ஆண்டு நிறுவன தினத்தையொட்டி, தூத்துக்குடியில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வங்கித் தலைவர் அண்ணாமலை, ”மெர்கன்டைல் வங்கி 2019-20ஆம் அரை நிதியாண்டில் வங்கி வணிகத்தில் 11.70 விழுக்காடு அளவு வளர்ச்சியடைந்து, 60 ஆயிரத்து 852 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது. நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குத் தொகைகள் 14.40 விழுக்காடு அளவு வளர்ச்சியடைந்து, 8 ஆயிரத்து 728 கோடி ரூபாயாக உள்ளது. இதன்மூலம் வங்கியின் நிகர லாபம் 151 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்தாண்டை காட்டிலும் 141 விழுக்காடு அதிகமாகும்.
இது தவிர வங்கியின் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில், தொழிற்கடன், பெண்களுக்கான தொழிற்கடன் உட்பட பல வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தவுள்ளோம்.
மேலும் தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையிலுள்ள அனைத்து கிளைகளிலும் கணினி மயமாக்கப்பட்ட காசு கையாளும் ரோபோக்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். வருங்காலத்தில் வணிக இலக்கு ரூ.72 ஆயிரத்து 500 கோடியாகவும், சேமிப்புத் தொகை ரூ.41 ஆயிரம் கோடியாகவும், நிகர லாபம் ரூ.360 கோடியாகவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க:சிட்டி யூனியன் வங்கி அரையாண்டு செயல்பாட்டு அறிக்கை தாக்கல்..!