தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவர்கள், ஆலைக்கு அருகில் உள்ள கிராம மக்கள் மற்றும் மீனவ மக்கள், திரளானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.
அப்போது மனு அளிக்க வந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த தங்கம் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலையினைத் திறக்க வேண்டும் என துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 16 பேர் மனு அளிக்க வந்தோம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வரும்பட்சத்தில், உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.
4 வருடங்கள் ஆலை மூடப்பட்டதால் வேலை வாய்ப்பு இல்லாமல் முடங்கியுள்ளோம். மேலும், ஆலையைத் திறந்தால் வேலை வாய்ப்பு தருவதாக ஆலை தரப்பில் தெரிவித்தனர். ஆகவே, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும்' எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஆபத்தான மேற்கூரை... அச்சத்தில் பொதுமக்கள்..