ETV Bharat / state

Whatsapp மூலம் ரூ.37 லட்சம் மோசடி; நைஜீரியர் கைது - ஷிப்பிங் நிறுவனத்திடம்

தூத்துக்குடியில் வாட்ஸ்ஆப் மூலம் ரூ.37 லட்சம் ரூபாயை ஏமாற்றியதாக, நைஜீரியாவை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.

நைஜீரியா நபர் கைது
நைஜீரியா நபர் கைது
author img

By

Published : Jan 2, 2023, 7:07 AM IST

Updated : Jan 2, 2023, 9:05 AM IST

தூத்துக்குடி: ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் பணிமய காட்வின் மனோஜ் (38). இவர் தூத்துக்குடியில், கப்பல் மூலம் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் ஷிப்பிங் தொழில் செய்து வருகிறார். இவர், தூத்துக்குடி, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், ”வாட்ஸ்ஆப் மூலம் டோகோவில் இருக்கும் வெடிஸ் அனிமல் ஹெல்த் இண்டஸ்ட்ரி (vetis Animal Health industry) என்ற நிறுவனத்திற்கு மருந்து ஏற்றமதி செய்ய, இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் சர்மா எண்டர்பிரைசஸ் மற்றும் சிக்கிம் மாநிலத்தில் இருக்கும் கிருஷ்ணா இண்டஸ்ட்ரீயலில் இருந்து மருந்து பெற்று ஏற்றுமதி செய்யுமாறு, கேட்டதை நம்பி மொத்தம் 36 லட்சத்து 98 ஆயிரத்து 1,800 ரூபாய் ஏமாற்றப்பட்டதாக” புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், நைஜீரியா நாட்டை சேர்ந்த இசி பெடலிஸ் நுடுபுசி (Ese fidelis ndubuisi) என்பவர் வாட்ஸ் அப் மூலம் போலியான விளம்பரத்தை பதிவேற்றம் செய்து, போலியான whatsapp எண் மற்றும் மின்னஞ்சல் மூலம் ஏமாற்றி இருப்பது தெரியவந்தது.

மோசடி செய்த நபர் மும்பையில் இருப்பது தெரிய வந்ததை அடுத்து உடனடியாக, சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான தனிப்படையினர் டிச.29ஆம் தேதி மும்பையில் அவரை கைது செய்தனர். அதன்பின்னர், சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இதுபோல இவர் பல நபர்களை ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆகவே, பலர் இந்த மோசடியில் ஏமாற்றப்பட்டிருக்கலாம் எனும் கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஈஷா யோகாவில் பயிற்சி முடிந்து மாயமான பெண் கிணற்றில் சடலமாக மிதப்பு?

Last Updated : Jan 2, 2023, 9:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.