ETV Bharat / state

2004 டிச.26.. கோரத்தாண்டவம் ஆடிய ஆழிப்பேரலை... உறவுகளை கடலுக்கு பறிகொடுத்துவிட்டு இன்றும் தீரா துயரத்தில் வாழும் குமரி மக்கள்! - 20 YEARS OF 2004 TSUNAMI

மக்களின் உயிரை உறிஞ்சி உடல்களை மட்டும் கரை சேர்த்த 2004 சுனாமி துயரச் சம்பவம் நிகழ்ந்து 20 ஆண்டுகள் கழிந்தும் பலியானவர்களின் நினைவுகளோடு வாழ்ந்துவரும் மக்களின் மனநிலை என்ன? விளக்குகிறது இந்த சிறப்பு தொகுப்பு.

ஆழிப்பேரலைக்கு உறவுகளை பறிகொடுத்த குமரி மக்கள்
ஆழிப்பேரலைக்கு உறவுகளை பறிகொடுத்த குமரி மக்கள் (Credits - ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2024, 7:00 AM IST

கன்னியாகுமரி: நாடு முழுவதும் நேற்று (டிசம்பர் 25) புதன்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், 2004 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் மறுநாளில் ஏற்பட்ட பேரழிவு ஏற்பட்டு, 20 வருடங்கள் கடந்துவிட்டாலும், சுனாமியில் உறவுகளை இழந்தவர்கள் இன்றும் அவர்களுடைய நீங்காத நினைவுகளுடனும், அவர்களது புகைப்படங்களை பார்த்துக்கொண்டும் ஒவ்வொரு நாளையும் கழித்துக்கொண்டு வருகின்றனர். அந்த நாளில் ஏற்பட்ட பேரழிவு இன்றுவரை கண்முன் காட்சியளிப்பதாக சுனாமியில் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தென்னிந்தியாவின் கடைகோடி பகுதியான தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், கொட்டில்பாடு, மணக்குடி போன்ற மீனவ கிராமங்களில் அதிகளவு சுனாமி பாதிப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் மீனவர்களை பொறுத்தவரையில் கிறிஸ்துமஸ் பண்டிகை நாள், அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நாள் என மூன்று நாட்களுக்கு கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லமாட்டார்கள். அப்படிதான், கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 25 அன்று கடற்கரை ஓரங்களில் வசிக்கும் மீனவர்கள், கடலுக்கு செல்லாமல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பகல் முழுவதும் வழிபாடு, கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் இரவில் நிம்மதியாக உறங்கி, மறுநாள் டிசம்பர் 26 ஆம் தேதி காலையில் வழக்கம்போல் எழுந்து அவர்களது வேலையில் ஈடுபட்டுள்ளனர். இச்சமயத்தில், தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் காலை 8 மணியளவில் திடீரென ஒட்டுமொத்த கடலும் பொங்கி எழுந்து கரையை நோக்கி வந்துள்ளது. வானுயிர் ஆக்ரோஷத்துடன் பேரலை சிறீப்பாய்ந்து வருவதை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சுனாமி: வழக்கத்தைவிட பல அடி உயரத்திற்கு பொங்கி எழுந்த பேரலை, கண்ணிமைக்கும் நேரத்தில் கடற்கரை அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் அவர்களின் உடைமைகளை வாரி சுருட்டிக்கொண்டு உள்ளே சென்றுள்ளது. என்ன நடந்தது? என்பதை அறிந்து கொள்வதற்குள் பல்லாயிரம் பேர் பேரலையில் சிக்கி உயிரிழந்தனர். இது குறித்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கடல் ஆக்ரோஷத்துக்கான அறிவியல் காரணங்களை விளக்கிய பிறகே உலகில் சுனாமி என்னும் பேரழிவு ஏற்பட்டதை அனைவரும் அறிந்தனர்.

சுனாமியில் இழந்த உறவுகளின் நினைவில் வாழ்பவர்களின் கண்ணீர் பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu)

7 ஆயிரம் பேர் உயிரிழப்பு: 2004-ல் இந்தோனேசியா கடல் பகுதியில் 9.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இந்தியா, தாய்லாந்து, இலங்கை, மியான்மர் உட்பட 14 நாடுகளில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு சுமார் 100 அடி அளவுக்கு ஆழிப்பேரலை வீசியது. இந்த ஆழிப்பேரலையால் தமிழகத்தில் சென்னை, நாகப்பட்டினம், கடலூர், கன்னியாகுமரி போன்ற கடலோர மாவட்டங்களில் பெரும் அழிவு ஏற்பட்டது. இந்த பேரழிவில் தமிழகத்தில் மட்டும் சுமார் 7000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்தது.

கடற்கரை முழுவதும் சுடுகாடாக மாறியது. எங்கு பார்த்தாலும் அழுகுரல் ஒலித்தது. ஆயிரக்கணக்கானோர், அவர்களது தாய், தந்தை, சகோதரர்கள், குழந்தைகளை இழந்தும் பரிதவித்தனர். கரை ஒதுங்கிய உடல்களை பொக்லைம் (ஜேசிபி) இயந்திரங்களைக் கொண்டு அள்ளி கடற்கரையிலேயே புதைத்தனர். இந்த காட்சிகள் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

20 ஆண்டுகள் கடந்த சுனாமி: முந்தைய நாள் குடும்பத்தோடு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியவர்கள், மறுநாள் ஏற்பட்ட சுனாமியால் கடற்கரையோரம் பரிதவித்தபடி நின்றனர். கிறிஸ்துமஸ் நாளில் மகிழ்ச்சியாக இளைப்பாறி உறங்கிய மக்கள், மறுநாள் உறவுகள் இல்லாமலும், உறக்கமும் இல்லாமலும் தனிமையில் நின்றனர்.

சுனாமி ஏற்பட்டு 20 ஆண்டுகளை கடந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், மணக்குடி பகுதி மக்கள் அந்த பாதிப்பில் இருந்து மீண்டார்களா? சுனாமியில் பறிகொடுத்தவர்களின் நினைவுகள் அவர்கள் மனதைவிட்டு நீங்கியதா?

அனைத்தையும் அழித்த சுனாமி: சுனாமியில் மகள், பேரன்கள் என நான்கு பேரை பறிகொடுத்த ஜெபஸ்டின் மேரி கூறுகையில், “அன்றைய தினம் நான் எனது பேரக்குழந்தையுடன் விளையாடி கொண்டிருந்தேன். கடற்கரையில் இருந்தவர்கள் தன்ணீர் வருகிறது என்று சத்தம் போட்டனர். வெளியில் வந்து எனது மகளை பார்ப்பதற்குள், சுனாமி வந்து அனைத்தையும் அழித்தது. நான் கண் விழித்து பார்த்தபோது ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் இருந்தேன்.

இந்த சுனாமியில் எனது மகள், அவளின் 2 ஆண் குழந்தைகள் மற்றும் எனது மகன் என 4 பேரும் உயிரிழந்தனர். 20 வருடங்கள் கடந்தாலும், தினமும் எனது மகள், பேரன்கள், மகனை நினைத்து அழுவேன். நான் அவர்களுடன் செல்லும்வரை அவர்களது நினைவு எனக்குள் இருக்கும்” என்று கண்ணீர் மல்க கூறினார் ஜெபஸ்டின் மேரி.

தொடரும் வேதனை: சூசையா என்பவர் கூறுகையில், “என் மனைவி வெளியூருக்கு வேலைக்கு சென்றிருந்தார். சுனாமி நாளன்று நான் அவரை பார்க்க சென்றிருந்தேன். சுனாமி ஆழிப்பேரலையில் தனது மூன்று மகள்கள், மகன் என நான்கு பேர் உயிரிழந்தனர். அவர்களை இழந்து தற்போதுவரை வேதனையோடு வாழ்ந்து வருகிறேன்” என்றார்.

'தந்தை, அண்ணனை பறிகொடுத்தேன்': சுனாமியில் தனது தந்தை மற்றும் அண்ணனை பறிகொடுத்த வின்சென்ட் என்பவர் பேசும்போது, "அன்று சினிமா பார்க்கச் சென்று திரும்பியபோது, ஊருக்குள் ஒரே அழுகை சத்தம், லாரியில் ரத்தமும் கரையுமாக பலர் இருந்தனர். ஆழிப்பேரலை தாக்கியதில் ஊரே அழிந்துவிட்டது என்று கூறினார்கள். கண்ணீரோடு ஊருக்குள் சென்றபோது என்னை விடவில்லை.

அதன் பிறகுதான் சுனாமி அலையில் சிக்கி எனது தந்தை மற்றும் மூத்த அண்ணன் உயிரிழந்தது தெரிய வந்தது. பாதிப்பிலிருந்து படிப்படியாக மீண்டு வந்தாலும் கூட அவர்களின் நினைவு என்றைக்கும் மறக்காது. தினமும் அவர்களின் புகைப்படத்தை வீட்டில் வைத்து வணங்குகிறேன்" என்று வேதனையோடு தெரிவித்தார்.

சுனாமியை பார்த்தவரின் அனுபவம்: சுனாமியை நேரில் பார்த்த ஆல்பர்ட் நம்மிடம் கூறுகையில், “சுனாமி வந்த அன்று நாங்கள் கடற்கரையில் இருந்தோம். முதலில் கடல் நூறு அடி தூரத்திற்கு உள்வாங்கியது. அதன் பிறகு எங்கள் பகுதியில் இரண்டு கட்டமாக ஆழிப்பேரலை வந்தது. நாங்கள் ஒரு சிலர் தென்னை மரத்தில் ஏறி உயிர் பிழைத்தோம் .எங்கள் பகுதியில் 115 பேர் சுனாமியில் சிக்கி உயிரிழந்தனர். பாதிப்பிலிருந்து மீண்டு வர மூன்று வருடங்கள் ஆனது” என்றார்.

பொன்னிபாஸ் கூறும்போது, “எங்கள் பகுதி தாழ்ந்த பகுதி என்பதால் இங்கு பல உயிர் சேதங்கள் ஏற்பட்டது. அரசாங்கம் இன்று வரை எங்களை கண்டுகொள்ளவில்லை. அரசியல்வாதிகளும் ஓட்டு கேட்பதற்கு மட்டுமே இங்கு வருகிறார்கள். தினமும் பயத்தோடு வீட்டில் தூங்குகிறோம். சுனாமியில் எனது அம்மா, அக்கா, அக்கா மகன் இறந்துவிட்டனர். எனவே அரசு எங்களுக்கு அலைத்தடுப்பு சுவர் உடனடியாக அமைத்து தர வேண்டும்” என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.