ETV Bharat / state

'கமல் நாக்கை அறுத்துவிடுவேன் என்று கூறிய ராஜேந்திர பாலாஜியைக் கைதுசெய்க' - தமிழ்நாடு மக்கள் இயக்க தலைவர் மள்ளர் காந்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜைச் சந்தித்து ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்ய வேண்டும் என மனு அளித்தார்

'கமல் ஹாசன் நாக்கை அறுத்துவிடுவேன் என்ற ராஜேந்திர பாலாஜியின் சர்ச்சை பேச்சுதான் தேர்தலில் எனது தோல்விக்குக் காரணம். எனவே எனது புகாரின் மீது தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும், ராஜேந்திர பாலாஜியைக் கைதுசெய்ய வேண்டும்' எனத் தமிழ்நாடு மக்கள் இயக்க தலைவர் மள்ளர் காந்தி தெரிவித்துள்ளார்.

Kamal Haasan நாக்கை அறுத்து விடுவேன் என்ற ராஜேந்திர பாலாஜி கைது செய்ய வேண்டும்

author img

By

Published : Dec 27, 2021, 6:28 PM IST

தூத்துக்குடி: தமிழ்நாடு மக்கள் இயக்கத் தலைவர் மள்ளர் காந்தி தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்த அவ்வியக்கத்தினர் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜை சந்தித்து அளித்த மனுவில் ராஜேந்திர பாலாஜியைக் கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

இது குறித்து மள்ளர் காந்தி செய்தியாளரைச் சந்தித்துக் கூறுகையில், "2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ஒட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளராக நான் போட்டியிட்டேன். அப்போது தேர்தல் பணிக்காகத் தூத்துக்குடியில் முகாமிட்டிருந்த ராஜேந்திர பாலாஜி, என்னை ஆதரித்து பரப்புரைக்காக வந்திருந்த கமல் ஹாசனை அருவருக்கத்தக்க வகையில் 'நாக்கை அறுத்து விடுவேன்' எனக் கூறியிருந்தார்.

ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்ய வேண்டும்
ராஜேந்திர பாலாஜியைக் கைதுசெய்ய வேண்டும்

ராஜேந்திர பாலாஜியின் இந்தச் சர்ச்சைப் பேச்சு குறித்து அப்போது நான் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தேன். அதன்பேரில் காவல் துறையினர் எனது புகாரைப் பதிவுசெய்து ஒப்புகைச் சீட்டு வழங்கினர்.

கமல் நாக்கை அறுத்துவிடுவேன் என்ற ராஜேந்திர பாலாஜி கைதுசெய்ய வேண்டும்

ஆனால், அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராஜேந்திர பாலாஜியின் சர்ச்சைப் பேச்சுதான் தேர்தலில் எனது தோல்விக்குக் காரணம். எனவே எனது புகாரின் மீது தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், ராஜேந்திர பாலாஜியைக் கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்துள்ளேன்" என்றார்.

இதையும் படிங்க: Thiruchendur temple anarchy: திருச்செந்தூர் முருகன் கோயிலில் தொடரும் உதவி ஆணையரின் அராஜகம்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.