தூத்துக்குடி: மத்திய பிரதேசத்தை சேர்ந்த இரும்பு பட்டை மற்றும் அரிவாள் தயாரிக்கும் கூலித் தொழிலாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் மதுரையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, கோவில்பட்டி அருகே முத்தலாபுரம் பாலம் அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இதில் வேனில் பயணித்த லாலு என்பவர் சம்பவ இடத்திலேயே பலத்த காயமடைந்து உயிரிழந்தார். மேலும் வேனில் பயணித்த 15 தொழிலாளர்கள் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காயம்பட்டவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து தொடர்பாக எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: உபியில் லாரி மோதி 5 பேர் உயிரிழப்பு.. விபத்தை வேடிக்கை பார்த்ததால் வீபரீதம்..