ETV Bharat / state

'அபராதத் தொகையை உயர்த்தியதன் மூலம் லஞ்சம் பெருகியுள்ளது' -லாரி உரிமையாளர் சங்க நிர்வாகி - லாரிகளுக்கு அபராதத் தொகை உயர்வு

தூத்துக்குடி: லாரிகளுக்கு அபராதத் தொகையை உயர்த்தியதன் மூலமாக லஞ்சம் பெருகியுள்ளது என லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஜெயசீலன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

லாரி உரிமையாளர் சங்க நிர்வாகி ஜெயசீலன்
author img

By

Published : Oct 1, 2019, 11:38 PM IST

தூத்துக்குடியில் லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தனர். அப்போது லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஜெயசீலன் கூறுகையில், ”தூத்துக்குடி துறைமுகத்தை மையமாகக் கொண்டு 2000 முதல் 3000 லாரிகள் வரை சரக்கு ஏற்றி இறக்கும் தொழிலுக்காக இயங்கிவருகிறது. தற்போது மத்திய அரசு லாரிகளில் அதிக சுமை ஏற்றினால் விதிக்கும் அபராதத் தொகையை அதிகரித்துள்ளது” என்றார்.

லாரிகளுக்கு அபராதத் தொகையை உயர்த்தியுள்ளதன் மூலம் விபத்துகள் குறையும் எனக் கூறி வருகின்றனர்.
ஆனால் லாரிகளில் ஏற்றப்படும் அதிகப்படியான சுமை என்பது மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகத்தில் இருந்து தான் எடுத்துச்செல்லப்படுகிறது என்றும் ஜெயசீலன் கூறினார்.

அதிகச் சுமை ஏற்றப்பட்ட லாரிகளை கண்டுகொள்ளாமல் விடுவதற்கு அதிகாரிகள் லஞ்சம் பெறுகின்றனர் என்று கூறிய ஜெயசீலன், தமிழ்நாடு முழுவதும் இந்த லஞ்ச நடவடிக்கை தொடர்ந்து நடைபெறுகிறதாகவும் மதுரையில் இதற்காக குழு ஒன்று செயல்படுகிறது என்றும் கூறினார்.

லாரி உரிமையாளர் சங்க நிர்வாகி ஜெயசீலன்

இந்த நிலைமை தொடர்ந்து நீடித்தால் லாரி உரிமையாளர்களின் தொழில் நலிவடைந்து, அவர்களின் கடனை கட்ட முடியாத சூழ்நிலை ஏற்படும் என்று பேசிய ஜெயசீலன், உடனடியாக துறைமுக நிர்வாகம் இதில் தலையிட்டு லாரியின் கொள்ளளவுக்கு ஏற்றவாறு சரக்குகளை ஏற்றி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தமிழ்நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: புத்துணர்ச்சியை தரும் மேஜிக்...சர்வதேச காபி தினம்!

Intro:லாரிகளுக்கு அபராதத் தொகை உயர்த்தியதன் மூலமாக லஞ்சம் தான் பெருகியுள்ளது - லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் தூத்துக்குடியில் பேட்டிBody:

தூத்துக்குடி

தூத்துக்குடியில் லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். அப்பொழுது லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஜெயசீலன் கூறுகையில்,

தூத்துக்குடி துறைமுகத்தை மையமாக கொண்டு 2000 இருந்து 3000 லாரிகள் சரக்கு ஏற்றி இறக்கும் தொழிலுக்காக இயங்கி வருகிறது. தற்பொழுது மத்திய அரசு லாரிகளில் அதிக பாரம் ஏற்றினால் விதிக்கப்படும் அபராத தொகையை அதிகரித்துள்ளது. டன்னுக்கு 20,000 முதல் ஒவ்வொரு டன்னுக்கும் 2000 ரூபாய் என்ற அளவுக்கு அபராத தொகையை அதிகரித்துள்ளது.
லாரிகளுக்கு அபராதம் தொகையை உயர்த்தி உள்ளதன் மூலம் விபத்துகள் குறையும் என கூறி வருகின்றனர்.
ஆனால் லாரிகளில் ஏற்றப்படும் அதிகப்படியான பாரம் என்பது மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகத்தில் இருந்து தான் எடுத்து செல்லப்படுகிறது. மூன்று வண்டிகளில் கொண்டு செல்லவேண்டிய சரக்குகளை ஒரே வண்டியில் ஏற்றி அனுப்பும் நிலை உள்ளது. இதனால் லாரிகளுக்கு சரியான ஓட்டம் இல்லாமல் லாரி தொழில் நட்டம் அடைகிறது. மேலும் உயர்த்தப்பட்ட அபராத தொகையினால் அதிகபாரம் ஏற்றுவது குறையும் என்பதற்கு மாறாக லஞ்ச லாவண்யம் தான் பெருகி வருகிறது. அதிக பாரம் ஏற்றப்பட்ட லாரிகளை கண்டுகொள்ளாமல் விடுவதற்கு அதிகாரிகள் லஞ்சம் பெறுகின்றனர். தமிழகம் முழுவதும் இந்த லஞ்ச நடவடிக்கை தொடர்ந்து நடைபெறுகிறது. மதுரையில் இதற்காக குழு ஒன்று செயல்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரையில் உயிரிழப்பு ஏற்பட்டால் தான் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தப்படும் என்றால் இன்னும் எத்தனை பேர் உயிரிழக்க வேண்டும். இந்த நிலைமை நீடித்தால் லாரி தொழிலும்,லாரி உரிமையாளர்களும் நலிவடைந்து கடனை கட்ட முடியாத சூழ்நிலை ஏற்படும். ஆகவே உடனடியாக துறைமுக நிர்வாகம் இதில் தலையிட்டு லாரியின் கொள்ளளவுக்கு ஏற்றவாறு மட்டுமே சரக்குகளை ஏற்றி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் தமிழகம் முழுவதும் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் போராட்டம் நடைபெறும் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.