ETV Bharat / state

குலசேகரன்பட்டினம் தசரா விழாவின் 5 ஆம் நாள்... அம்பாள் நவநீதகிருஷ்ணர் கோலத்தில் உலா... - Every year on the eve of Navratri

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவின் 5 ஆம் நாளான இன்று அம்பாள் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழா 5 ஆம் நாள் இன்று- சிறப்பு அபிஷேகம்

author img

By

Published : Oct 1, 2022, 3:48 PM IST

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவிலில் தசரா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நவராத்திரி தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த தசரா திருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

குலசேகரன்பட்டினம்

தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறக்கூடிய தசரா திருவிழாவில் நாள்தோறும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவின் 5ஆம் நாளான இன்று (அக்.01) அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அம்பாள் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தசரா திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் குலசேகரன்பட்டினம் பகுதி திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்காரம் வரும் 5 ஆம் தேதி கோவில் கடற்கரையில் நடைபெறுகிறது.

இதையும் படிங்க:ஈபிஎஸ்சின் கனவை தகர்த்த உச்சநீதிமன்றம் - அதிமுகவில் அடுத்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.