ETV Bharat / state

"அச்சம் காரணமாக மாணவி உடனடியாக புகார் கொடுக்கவில்லை"-உயர் கல்வித்துறை அமைச்சர் சொல்லும் காரணம்! - ANNA UNIVERSITY SEXUAL CASE

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிறவி குணம் மாறவில்லை, அமைதியாக இருந்த தமிழகத்தில் மீண்டும் தனது குணத்தை காட்ட ஆரம்பித்து விட்டார் என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன்(கோப்புப் படம்)
உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன்(கோப்புப் படம்) (Image credits-Etv Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2024, 8:34 PM IST

தஞ்சாவூர்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிறவி குணம் மாறவில்லை, அமைதியாக இருந்த தமிழகத்தில் மீண்டும் தனது குணத்தை காட்ட ஆரம்பித்து விட்டார் என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம் என பல்வேறு திட்டங்களை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் இன்று திறந்து வைத்தார், பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்வு 23ஆம் தேதி நடைபெற்றுள்ளது. 25ஆம் தேதி காவல்துறையில் பெறப்பட்ட புகார் மூன்று மணி நேரத்தில் உரிய குற்றவாளி கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

அனைத்து பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளில் மாணவர்கள், மாணவிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக குழுக்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. மாணவி பாதிக்கப்பட்ட நிகழ்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு குழுவிடம் சொல்லி இருந்தால் இன்னும் துரித நடவடிக்கை எடுக்க வாய்ப்பாக இருந்திருக்கும். தனிப்பட்ட அச்ச உணர்வு, பெண்ணுக்கே உரிய மனநிலை ஆகியவற்றால் இரண்டு தினங்கள் கழித்து அந்த மாணவி புகார் கொடுத்திருக்கிறார். எனினும் சம்பந்தப்பட்ட குற்றம்சாட்டப்பவரை கைது செய்து இருக்கிறோம். அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் இது குறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க: "திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலணி அணியமாட்டேன்"-அண்ணாமலை அதிரடி சபதத்தின் முழு விவரம்!

மாணவி பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை மனதில் வைத்து அரசியல் செய்ய முற்பட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால், 'கடந்த காலங்களில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் தொடர்புடைய குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மாநில அரசே துணை நின்ற சம்பவங்கள் நடந்தது உண்டு' திமுக எதிர்கட்சிகளாக இருந்த போது பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசிய போதெல்லாம் நிராகரித்தார்கள்.

ஒன்றரை மாத காலம் அது சர்ச்சைக்கு உரியதாகவே இருந்தது, தற்பொழுது இந்த சம்பவத்தில் 3 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்து இருக்கிறோம். சுதந்திர உணர்வோடு யாருடைய தடையும் இன்றி நடவடிக்கை எடுத்திருப்பதை பாராட்ட மனமில்லாமல் இந்த அரசை குறை சொல்லும் மனநிலை தான் உள்ளது. இந்த விவகாரத்தில் அரசின் செயல்பாடு, பல்கலைக்கழகங்கள் செயல்பாடு, காவல்துறையின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. மாணவிகளின் நலன் காக்க இந்த அரசு பெருந்துணை புரியும். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிறவி குணம் மாறவில்லை. மூன்று நான்கு மாத காலம் அமைதியாக இருந்த தமிழகத்தில் மீண்டும் தனது குணத்தை காட்ட ஆரம்பித்து விட்டார்,'என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.