தூத்துக்குடி: இந்தியாவில் மைசூருக்கு அடுத்தாற்போல் தசரா திருவிழாவில் தூத்துக்குடி மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா, இத்திருவிழா வரும் அக்.15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அக்.14ஆம் தேதி காலை 11 மணிக்கு காளி பூஜை, பகல் 12 மணிக்கு அன்னதானம், இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்புக் கட்டுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுகிறது. வரும் அக்.15ஆம் தேதி காலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்ட வீதி உலா வருதல், காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது.
தொடர்ந்து, பக்தர்களுக்கு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. கடற்கரை பகுதியில் சந்தையடியூர் தசரா குழு சார்பில் காலை அன்னதானமும் காலை 10 மணிக்கு கோயில் அன்னதான கூடத்தில் சிவலூர் தசரா குழு சார்பில் அன்னதானமும் நடக்கிறது. காலை 10, மாலை 3, மாலை 5:30 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் வீதி உலா வருதல் நடக்கிறது.
அக்.16ஆம் தேதி இரண்டாம் நாள் திருவிழாவில் இரவு 10 மணிக்கு அம்மன் கற்பக விருட்ச வாகனத்தில் விஸ்வகர்மேஸ்வரர் திருக்கோலத்தில் வீதி உலா வருதல், 3ஆம் நாள் திருவிழாவான வரும் அக்.17ஆம் தேதி இரவு 10 மணிக்கு அன்னை ரிஷபம் வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் திருவீதி உலா வருதல், 18ஆம் தேதி (புதன் கிழமை) நான்காம் நாள் திருவிழாவில் காலை 9 மணிக்கு காவடி தெரு வீதி உலா வருதல், இரவு 10 மணிக்கு முத்தாரம்மன் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோளத்தில் திருவீதி உலா வருதல் வருதல் நடைபெறுகிறது.
மேலும், 19ஆம் தேதி (வியாழக்கிழமை) ஐந்தாம் நாள் திருநாள் இரவு 10 மணிக்கு அன்னை காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் திருக்கோளத்தில் வீதி உலா வருதல், 20ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) 6 ஆம் நாள் திருநாள் இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் மகிசாசுரமர்த்தினி திருக்கோளத்தில் வீதி உலா வருதல், அக்.21ஆம் தேதி (சனிக்கிழமை) ஏழாம் நாள் திருநாள் மாலை 4:30 மணிக்கு மகிஷாசுரன் திருவீதி உலா வறுதல், இரவு 10 மணிக்கு அன்னை பஞ்சபரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் வீதி உலா வருதல் நடைபெறுகிறது.
தொடர்ந்து, அக்.22ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) எட்டாம் நாள் திருநாளில் இரவு 10 மணிக்கு அன்னை கமலம வாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்தில் அம்மன் வீதி உலா வருதல், அக்.23ஆம் தேதி (திங்கட்கிழமை) ஒன்பதாம் நாள் திருநாளில் இரவு 10 மணிக்கு அன்னை அன்ன வாகனத்தில் கலைமகள் கோலத்தில் அம்மன் திருவீதி உலா வருதல் நடக்கிறது. பத்தாம் நாள் திருநாளான 24ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்ற இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன் எழுந்தருளி மகிஷாசுர சம்ஹாரம் செய்தல் நடைபெறுகிறது.
11ஆம் நாள் திருநாள் 25ஆம் தேதி (புதன்கிழமை) அதிகாலை ஒரு மணிக்கு சூரசம்காரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. அதிகாலை 2 மணிக்கு அம்மன் சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு எழுந்தருளி சாந்தாபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. அதிகாலை 3 மணிக்கு அம்மன் சிதம்பரேஸ்வரர் கோயில் அபிஷேக மேடையில் அபிஷேக ஆராதனைகள் முடிந்து திருத்தேரில் பவனி வந்து தேர் நிலைல்யம் வருதல் நடைபெறுகிறது.
காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகைச் திருவீதி உலா புறப்படுதல் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு அம்மன் கோயில் வந்து சேர்ந்தவுடன் நான்கு முப்பதுக்கு காப்பு கலைதள் நடைபெறுகிறது. தசரா திருவிழா ஏற்பாடுகளை தக்கார் சங்கர் மற்றும் இணை ஆணையர் அன்புமணி கோயில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பழனியில் பக்தர் - பாதுகாவலர் மோதல் விவகாரம்; நான்கு பாதுகாவலர்கள் பணியிடை நீக்கம்!