ETV Bharat / state

கற்குவேல் அய்யனார் கோயிலில் கள்ளர் வெட்டு திருவிழா.. புனித மண்னை எடுக்க அலைமோதிய பக்தர்கள்!

Karguvel Ayyanar Temple: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள புகழ் பெற்ற கற்குவேல் அய்யனார் கோயிலில் கள்ளர் வெட்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

கள்ளர் வெட்டு திருவிழா.
கள்ளர் வெட்டு திருவிழா.
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 17, 2023, 11:45 AM IST

Updated : Dec 17, 2023, 11:54 AM IST

கள்ளர் வெட்டு திருவிழா

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகிலுள்ள தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில் நடைபெறும் கள்ளர் வெட்டு திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இந்த கள்ளர் வெட்டுத் திருவிழாவிற்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, புனித மணலை எடுத்துச் செல்வது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான கள்ளர் வெட்டுத் திருவிழா கடந்த நவம்பர் 17ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் அய்யனாா் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, கள்ளர் வெட்டுத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளர் வெட்டு நிகழ்வு, கோயில் பின்புறமுள்ள தேரிப் பகுதியில் நடைபெற்றது. இதில் பொதுமக்களின் கடைகளில் திருடி தொல்லை கொடுத்து வரும் கள்ளர்களை தண்டிக்கும் விதமாக, அய்யனார் அருள் வந்து இளநீரை கள்ளராக பாவித்து இளநீர் வெட்டப்பட்டது.

அந்த இளநீர் பட்ட மணலை பக்தர்கள் புனித மணலாக கருதி, தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்வது வழக்கம். அந்த மணலை விவசாய நிலத்தில் போட்டால் விவசாயம் செழிக்கும், வீட்டில் வைத்தால் செல்வம் கொழிக்கும் என கருதி, இளநீர் பட்ட மணலை பக்தர்கள் எடுத்துச் சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இத்திருவிழாவை முன்னிட்டு, கோயில் மற்றும் தேரிப் பகுதியில் தூத்துக்குடி மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். திருச்செந்தூா் அருகே உள்ள தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில் நடிகர் சூர்யாவின் சிங்கம், தனுஷின் அசுரன் போன்ற திரைப்படங்கள் படம் பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. அறநிலையத்துறை இணை ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு!

Last Updated : Dec 17, 2023, 11:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.