ETV Bharat / state

ஆதிச்சநல்லூர் அகழாய்வு குறித்து வாக்குறுதி அளித்த கனிமொழி - கனிமொழி எம்பி ஆதிச்சநல்லூர் வருகை

தூத்துக்குடி: ஆதிச்சநல்லூரில் 2004ஆம் ஆண்டில் நடந்த அகழாய்வு அறிக்கையை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

kanimozhi mp
kanimozhi mp
author img

By

Published : Sep 29, 2020, 10:08 PM IST

ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடைபெறும் இடத்தினை ஆய்வு செய்த திமுக எம்பி கனிமொழி, புளியங்குளம் பாண்டியராஜா கோயில் அருகிலுள்ள அகழாய்வு குழிகளையும் பார்வையிட்டார். பின்பு அங்கு அமைக்கப்பட்ட உலை போன்ற அமைப்பையும் முதுமக்கள் தாழி அமைந்த இடத்தினையும் ஆய்வு செய்தார்.

அப்போது, ஆதிச்சநல்லூர் தொல்லியல் இயக்குநர் பாஸ்கர், தொல்லியல் ஆய்வாளர் லோகநாதன் ஆகியோர் ஆய்வுக்களம் குறித்து கனிமொழியிடம் விளக்கினர்.

ஆராய்ச்சியாளர்களுடன் ஆலோசனை நடத்திய கனிமொழியிடம், ஆதிச்சநல்லூரில் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற அகழாய்வு அறிக்கையை வெளியிடவும், மத்திய தொல்லியல் துறைக்கு உட்பட்ட 114 ஏக்கரில் மாநில அரசை ஆய்வு செய்ய அனுமதிக்க நடவடிக்கை எடுக்கவும், மத்திய பட்ஜெட்டில் அறிவித்தப்படி உலக தரம் வாய்ந்த அருங்காட்சியம் ஆதிச்சநல்லூரில் அமைத்திடவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கனிமொழி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

முன்னதாக சிவகளையில் நடந்த அகழாய்வை கனிமொழி மற்றும் வெங்கடேசன் எம்பி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதையும் படிங்க: தமிழனின் நாகரீகத்தை பறைசாற்றும் ஆதிச்சநல்லூர் அகழாய்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.