ETV Bharat / state

’குடியுரிமை பெறாமல் முகாமில் தங்கியிருப்பவர்களுக்கு உதவி’ - கனிமொழி எம்பி உறுதி - kanimozhi mp visits srilankan refugee camp

குடியுரிமை பெறாமல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு கூடிய விரைவில் தேவையான உதவிகளைச் செய்துதர நடவடிக்கை எடுப்பதாக கனிமொழி எம்பி உறுதியளித்துள்ளார்.

இலங்கை அகதிகள் முகாமில் ஆய்வு
இலங்கை அகதிகள் முகாமில் ஆய்வு
author img

By

Published : Jun 23, 2021, 2:16 PM IST

தூத்துக்குடி: தாப்பாத்தி, குளத்துள்வாய்பட்டி, மாப்பிளையூரணி ஆகிய மூன்று இடங்களில் இலங்கை அகதிகள் முகாம்கள் செயல்பட் வருகின்றன.

இலங்கை அகதிகள் முகாமில் ஆய்வு

மாப்பிள்ளையூரணியில் செயல்பட்டுவரும் இலங்கை அகதிகள் முகாமில் மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆய்வுமேற்கொண்டார். அப்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 98ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்குத் தலைமை தாங்கிய மக்களவை உறுப்பினர் கனிமொழி, அகதிகள் முகாமில் உள்ள 57 குடும்பங்களுக்கு நலத்திட்ட தொகுப்புகளை வழங்கினார். தொடர்ந்து, மக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

இலங்கை அகதிகள் முகாமில் ஆய்வு

தேவைகள் நிறைவேற்றப்படும்!

தொடர்ந்து, மக்களிடம் பேசிய அவர், அரசால் கணக்கிடப்பட்டுள்ள முகாமில் வாழும் 57 குடும்பங்களைத் தவிர, இதர முகாம்களிலிருந்து இங்கு வந்தவர்களும், குடியுரிமை பெறாமல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் கூடிய விரைவில் தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

kanimozhi mp
நலத்திட்ட தொகுப்பு வழங்கிய கனிமொழி எம்பி

கனிமொழியுடன் செல்ஃபி எடுத்த மாணவிகள்

முகாமிலிருந்த இளம்பெண்கள், மாணவிகள் கனிமொழியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், அகதிகள் மறுவாழ்வு வட்டாட்சியர் செல்வகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: நீட் விலக்கிற்கு குரல் கொடுக்கத் தயார்- நயினார் நாகேந்திரன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.