ETV Bharat / state

கனிமொழி தலைமையில் சாலை மறியல் - கோவில்பட்டியில் பரபரப்பு - கனிமொழி திமுக

தூத்துக்குடி: கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறி கனிமொழி எம்பி சாலை மறியலில் ஈடுபட்டார்.

சாலை மறியல் போராட்டத்தில் கனிமொழி
சாலை மறியல் போராட்டத்தில் கனிமொழி
author img

By

Published : Jan 30, 2020, 5:36 PM IST

கோவில்பட்டியில் ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், தேர்தல் அலுவலருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தேர்தல் ஜனவரி 30ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த 10 பேரும், அதிமுக கூட்டணியைச் சேர்ந்த 9 பேரும் வாக்களித்தனர்.

திமுக சார்பில் பூமாரியும், அதிமுக சார்பில் கஸ்தூரியும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். மொத்தமுள்ள 19 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில், 9 திமுக வார்டு கவுன்சிலர்கள், 6 அதிமுக கவுன்சிலர்கள், நான்கு சுயேட்சைகள் வாக்களித்தனர்.

இதில் யாரும் எதிர்பாராத விதமாக தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து தேர்தல் அரங்குக்குள் சலசலப்பு ஏற்பட்டது. திமுக தரப்பினர் இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையின் மூலம் வெளியேற்ற தேர்தல் அலுவலர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

அதனால் திமுக கவுன்சிலர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இந்தத் தகவலறிந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதா ஜீவன் உள்ளிட்டோர் கோவில்பட்டி ஒன்றிய அலுவலகத்துக்கு வருகை தந்தனர்.

கனிமொழி, கீதா ஜீவன் ஆகியோர் தேர்தல் அலுவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேர்தல் முறையாக நடைபெறவில்லை. இந்தத் தேர்தலை தள்ளி வைத்துவிட்டு மறு தேர்தல் நடத்த வேண்டும் என கனிமொழி எம்பி கோரிக்கை விடுத்தார். இதை அலுவலர்கள் ஏற்க மறுத்ததால் கனிமொழி அரங்கை விட்டு வெளியே வந்து சாலை மறியலில் ஈடுபட்டார். இது ஒரு ஜனநாயக படுகொலை, கடந்த ஒரு வார காலமாக உள்ளூரில் இருக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜு, அதிமுக வெற்றிபெறும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அலுவலர்கள் துணையுடன் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது அராஜகம் எனவும், எனவே மறுதேர்தல் நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சாலை மறியல் போராட்டத்தில் கனிமொழி

மேலும் இது குறித்து திமுக தலைமை மூலம் மாநில தேர்தல் ஆணையத்துக்கு புகாரளிக்க உள்ளதாகவும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் கூறினார்.

கோவில்பட்டி - பசுவந்தனை சாலையில் அமர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு சாலை மறியலை கைவிட்ட கனிமொழி எம்பி, சாலையோரமாக அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். இதனால் தொடர்ந்து ஒரு பதட்டமான சூழ்நிலை காணப்படுகிறது.

Intro:கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கனிமொழி எம்பி சாலை மறியலால் ஈடுபட்டதால் பரபரப்பு

Body:கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கனிமொழி எம்பி சாலை மறியலால் ஈடுபட்டதால் பரபரப்பு

தூத்துக்குடி

கோவில்பட்டியில் ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது இதில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி கனிமொழி எம்பி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் தேர்தல் அதிகாரியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தேர்தல் ஜனவரி 30-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் திமுகவை சேர்ந்த 10 பேரும், அதிமுக கூட்டணி சேர்ந்த 9 பேரும் வாக்களித்தனர்.

திமுக சார்பில் பூமாரியும், அதிமுக சார்பில் கஸ்தூரியும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். மொத்தமுள்ள 19 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் 9 திமுக வார்டு கவுன்சிலர்கள் 6 அதிமுக கவுன்சிலர்கள் நான்கு சுயேட்சைகள் வாக்களித்தனர்.

இதில் யாரும் எதிர்பார்க்காத விதமாக தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார். இதை தொடர்ந்து தேர்தல் அரங்குக்குள் சலசலப்பு ஏற்பட்டது. திமுக தரப்பினர் இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையின் மூலம் தேர்தல் அதிகாரி வெளியேற்ற உத்தரவிட்டார். தொடர்ந்து காவல்துறையினர் வலுக்கட்டாயமாக திமுக கவுன்சிலர்கள் வெளியேற்றினார்கள். இதைத் தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பதட்டமான சூழல் ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி, மற்றும் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் உள்ளிட்டோர் கோவில்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் வருகை தந்தனர்.

தொடர்ந்து கனிமொழி எம்பி, கீதா ஜீவன் எம்எல்ஏ ஆகியோர் தேர்தல் அலுவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேர்தல் முறையாக நடைபெறவில்லை. இந்த தேர்தலை தள்ளி வைத்து விட்டு மறு தேர்தல் நடத்த வேண்டும் என கனிமொழி எம்பி கோரிக்கை விடுத்தார். இதை அதிகாரிகள் ஏற்க மறுத்ததால் திமுக எம்பி கனிமொழி அரங்கை விட்டு வெளியே வந்து சாலைமறியலில் ஈடுபட்டார். இது ஒரு ஜனநாயக படுகொலை எனவும் கடந்த ஒரு வார காலமாக உள்ளூரில் இருக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜு அதிமுக வெற்றி பெறும் என தெரிவித்திருந்தார் தெரிவித்து வந்த நிலையில் அதிகாரிகள் துணையுடன் அதிமுக வெற்றி பெற்றதால் அறிவித்துள்ளது அராஜகம் எனவும் எனவே மறுதேர்தல் நடத்த வேண்டும் எனவும் இது குறித்து திமுக தலைமை மூலம் மாநில தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளிக்க உள்ளதாகவும் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர உள்ளதாகவும் கூறி அவர் சாலைமறியலில் ஈடுபட்டார்.

கோவில்பட்டி - பசுவந்தனை சாலையில் அமர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் கோவில்பட்டி கோட்டாட்சியர்விஜயா உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்ட கனிமொழி எம்பி தொடர்ந்து சாலையோரமாக அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். இதனால் தொடர்ந்து ஒரு பதட்டமான சூழ்நிலை காணப்படுகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.