ETV Bharat / state

லடாக் பகுதியில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு கனிமொழி, கடம்பூர் ராஜு ஆறுதல் - thoothukudi army man died

லடாக் பகுதியில் உயிரிழந்த கோவில்பட்டி திட்டங்குளம் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரரின் குடும்பத்தை தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

kanimozhi mp
லடாக் பகுதியில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு கனிமொழி எம்பி, அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல்
author img

By

Published : Nov 20, 2020, 5:30 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (32), இந்திய ராணுவத்தில் நாயக் பொறுப்பில் பணியாற்றிவந்தார். திருமணமான இவருக்கு தமயந்தி என்ற மனைவியும் கன்னிகா (7), வைஷ்ணவி (4), பிரதீப் குமார் (1) ஆகிய மூன்று குழந்தைகளும் உள்ளனர். காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் பணியிலிருந்த கருப்பசாமி நேற்று முன்தினம் வாகன விபத்தில் உயிரிழந்தார்.

உயிரிழந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் உடல் நாளை அல்லது நாளை மறுதினம் அவரது சொந்த ஊரான கோவில்பட்டி திட்டங்குளத்திற்கு கொண்டுவரப்பட்டு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த ராணுவ வீரரின் வீட்டிற்குச் சென்று தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கருப்பசாமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவியும் அளித்தார்.

Minister Kadampur Raju
கருப்பசாமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் கடம்பூர் ராஜு

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாட்டுக்காக உயிரையும் துச்சமென மதித்து பணியாற்றச் சென்ற ராணுவ வீரர் கருப்பசாமியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கருப்பசாமியின் குடும்பத்தினருக்கு என்றும் திமுக துணை நிற்கும். கருப்பசாமியின் குழந்தைகளின் கல்விச் செலவை திமுக ஏற்கும்" என்றார்.

கருப்பசாமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய கனிமொழி எம்பி

இதனிடையே அமைச்சர் கடம்பூர் ராஜுவும் கருப்பசாமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, "வீரமரணம் அடைந்த கருப்பசாமியின் குடும்பத்தினருக்கு நிவாரணமும், அரசு சலுகைகளையும் அறிவிப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கருப்பசாமி மனைவியின் கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை வழங்க முதலமைச்சரிடம் வலியுறுத்தப்படும்" எனத் தெரிவித்தார்.

மேலும், உயிரிழந்த கருப்பசாமியின் குழந்தைகளுக்கு அரசு செய்யும் உதவிகள் தவிர்த்து தனது சொந்த பொறுப்பில் அந்த குடும்பத்துக்கான உதவிகளைச் செய்வேன் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: காஷ்மீரில் உயிரிழந்த தூத்துக்குடி ராணுவ வீரர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.