ETV Bharat / state

'திமுக மக்களை ஏமாற்றலாம்; கடவுளிடம் அது முடியாது' அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி: எப்படி தேர்தல் பயணம் வந்தாலும் திமுக வெற்றி பெறபோவதில்லை. வேஷம் போடுபவர்கள் மக்களை ஏமாற்றலாம்; ஆனால் கடவுளை ஏமாற்ற முடியாது என, அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

Minister Kadampur Raju
அமைச்சர் கடம்பூர் ராஜூ
author img

By

Published : Jan 26, 2021, 9:34 AM IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அரசு அறிவியல் கல்லூரியில் ரூ.5 கோடியே 10 லட்சம் மதிப்பில் மாணவர் விடுதிக்கான புதிய கட்டிடம் கட்டும் பணிக்கான அடிக்கல்லை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நாட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது," பச்சோந்தியைப் போல தேர்தல் வரவர நேரத்திற்கு நேரம் நிறத்தினை மாற்றிக்கொள்பவர்கள் திமுகவினர். அதிமுக என்றைக்கும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கும்.

ஸ்ரீரங்கத்தில் உள்ள கோயில், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவு இடத்திற்குச் சென்ற போது அங்கு வழங்கிய விபூதியை கீழே தள்ளிவிட்டு மக்கள் புண்படும் படி நடத்து கொள்பவர் மு.க ஸ்டாலின்.

தேர்தல் வரும் போது திமுகவினர் தங்களது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்வார்கள். இது இரட்டை வேடம்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ

திருச்செந்தூரில் அமைந்துள்ள செந்தில் ஆண்டவர் சூரசம்ஹாரம் செய்யும் ஆயுதம் வேல். அதை எடுத்துள்ளனர். அதனை முருகன் பார்த்துக் கொள்வார். வேஷம் போடுபவர்கள் மக்களை ஏமாற்றலாம், ஆனால் கடவுளை ஏமாற்ற முடியாது.

திமுக ஆட்சிக் காலத்தில் பெண்களின் பாதுகாப்பு எந்த லட்சணத்தில் இருந்தது என்று நாடறிந்த உண்மை. திமுக ஆட்சியில் மதுரையில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநகராட்சி உறுப்பினராக இருந்த லீலாவதி திமுக ரவுடிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

தற்பொழுது எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக, பெரம்பலூரில் மாமூல் தரவில்லை என்பதற்காக ப்யூட்டி பார்லர் உரிமையாளரை அடித்து உதைத்து, பின்னர் சமாதனப்படுத்தி வழக்கினை வாபஸ் பெற வைத்தனர். இதற்கு கனிமொழி விளக்கம் கொடுத்தால் அவருடைய கேள்விகளுக்கு பதில் கூறலாம்.

நாடாளுமன்ற தேர்தல், சட்டப்பேரவைத் இடைத்தேர்தல், உள்ளாட்சி, கூட்டுறவு தேர்தலிலின் போது அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருவரும் தான் வேட்பாளர்களை அறிவித்தனர்.

கட்சியில் எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை. அதிமுக வெற்றி பெற்று அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் விரும்புகின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு, கடந்த காலத்தினை விட தற்போது அதிகமாக எழுச்சியுடன் அதிமுக தொண்டர்கள் தேர்தல் பணியாற்றுவார்கள்.

மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது, ஒரு கிராமசபைக்கூட்டத்திற்கு கூட சென்றது இல்லை. தற்பொழுது தேர்தலுக்காக மக்களை ஏமாற்றுவதற்காக கிராம சபைக் கூட்டம் நடத்துகின்றனர்.

சம்பளத்திற்கு ஆள் பிடித்து திமுகவினர் கிராம சபைக் கூட்டம் நடத்துகின்றனர். கிராம சபைக் கூட்டம் தோல்வி அடைந்த காரணத்தினால் தான் தொகுதி வாரியாக தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகின்றனர்.

எப்படி தேர்தல் பயணம் வந்தாலும் திமுக வெற்றி பெறபோவதில்லை. 2016 தேர்தல் முடிவு வருவதற்கு முன்பு மாதிரி மந்திரி சபை அமைத்து வள்ளுவர் கோட்டத்தில் ஒத்திகை பார்த்தவர்கள் திமுகவினர்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஆனால், தொடர்ச்சியாக அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதைபோன்று தொடர்ச்சியாக 3ஆவது முறையாக வெற்றி பெற்று, அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்ற வகையில் தான் முதலமைச்சர் சுற்றுப் பயணம் அமைந்துள்ளது.

தேர்தல் முடிவும் அப்படித்தான் வரும். வரும் தேர்தல் ஆட்சி மாற்றித்திற்கான தேர்தல் கிடையாது, அதிமுக ஆட்சி தொடர்வதற்கான தேர்தல். நாங்கள் மட்டுமல்ல மக்களும் அந்த மன நிலையில் தான் உள்ளனர்.

யாராக இருந்தாலும் உடல் நிலை பாதிக்கப்பட்டாலும், உடல் நலம் பெறவேண்டும் என்று அனைவரும் கட்சி வேறுபாடி இன்றி கூறுவது வழக்கம். அந்த வகையில் தான் சசிகலா உடல் நலம் தொடர்பாக அமைச்சர்கள் கருத்து தெரிவித்து இருக்கலாம். மத்திய அரசு வழிகாட்டுதல் தெரிவித்தவுடன், அமைச்சர்களும் கரோனா தடுப்பு ஊசி போடுவதற்குத் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப்பட்டியலை தயாரிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.