ETV Bharat / state

'ரஜினிகாந்தின் முடிவு அவரது சொந்த விருப்பம்' - அமைச்சர் கடம்பூர் ராஜூ - தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ரஜினிகாந்த் முடிவு எந்த பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் எங்களுக்கு குரல் கொடுத்தால் ஏற்றுக்கொள்வோம் எனவும் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Minister Kadampur Raju
அமைச்சர் கடம்பூர் ராஜு
author img

By

Published : Dec 29, 2020, 6:27 PM IST

தூத்துக்குடி: நடிகர் கமல்ஹாசன் இங்கு தான் இருக்கிறாரா, இந்த நாட்டில் தான் இருக்கிறாரா என தெரியவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

தகவல் மற்றும் விளம்பரம் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், ரஜினிகாந்த் முடிவு எந்த பாதிப்பையும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தற்போது அவர் அறிவித்திருக்கும் முடிவானது அவரது தனிப்பட்ட முடிவு.

அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர் சந்திப்பு

மேலும் அவர் உடல் நலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் யாருடைய அரசியல் வருகையும் அதிமுகவை பாதிக்காது. அவர் தேர்தல் சமயத்தில் தங்களுக்கு குரல் கொடுத்தால் ஏற்றுக்கொள்வோம்.

தொட்டில் முதல் சுடுகாடு வரை ஊழல் என கமல்ஹாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். தொட்டில் குழந்தை திட்டம் குறித்து அன்னை தெரசா முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டிச் சென்றார்.

இத்திட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது அதிமுக அரசுதான். கமல்ஹாசன் இதெல்லாம் தெரிந்துதான் பேசுகிறாரா, இவர் இங்கு தான் இருக்கிறாரா, இந்த நாட்டில் தான் இருக்கிறாரா என தெரியவில்லை என்றார்.

இதையும் படிங்க: உருமாறிய கரோனாவுக்கு எதிராகவும் தடுப்பூசி செயல்படும் - மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.