ETV Bharat / state

நீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்: ஆட்சியர் உறுதி - மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி

தூத்துக்குடி: நாளை நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் நீர் சேமிப்பு, மரக்கன்று நடுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி
author img

By

Published : Aug 14, 2019, 11:30 PM IST

நாட்டின் 73ஆவது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி தேசத் தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, வ.உ.சிதம்பரனார் போன்றவர்கள் சுதந்திரத்தில் ஆற்றிய பங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்தந்த தலைவர்களின் முகமூடிகளை அணிந்தவாறு தூத்துக்குடி கால்டுவெல் பள்ளி மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்'

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மரம் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் இரண்டு லட்சம் மரங்கள் நடப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 500 குளங்கள் தூர்வாரப்பட உள்ளது. குளங்களை தூர்வார்வதற்காகவும், நீர்நிலைகளை பாதுகாப்பதற்காகவும் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கிராமசபைக் கூட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.

Intro:தூத்துக்குடி மாவட்டத்தில் 403 ஊராட்சிகளிலும் நாளை கிராம சபை கூட்டம்- நீர் சேமிப்பு, மரக்கன்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் - மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி பேட்டிBody:
தூத்துக்குடி

பாரத திருநாட்டின் 73 ஆவது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி தேச தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, வ.உ.சிதம்பரனார், பாரதியார், காமராஜர் போன்றவர்களின் சுதந்திரத்தில் ஆற்றிய பங்கு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்தந்த தலைவர்களின் முகமூடிகளை அணிந்தவாறு தூத்துக்குடி கால்டுவெல் பள்ளி மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர்,
பல்வேறு சுதந்திரப் போராட்ட வீரர்களை கொண்ட இந்த தூத்துக்குடி மாவட்டத்தில் அவர்களை பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் நடத்தியுள்ள இந்த பேரணி வரவேற்கக் கூடியது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மரம் நட்டு வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் இரண்டு லட்சம் மரங்கள் நடப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 500 குளங்கள் தூர் வரப்பட உள்ளது குளங்களை தூர் வாருவதற்காகவும், நீர்நிலைகளை பாதுகாப்பதற்காகவும் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு நடத்த வகையிலும் கிராமசபை கூட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா மற்றும் பள்ளி தாளாளர் சி.த. செல்லபாண்டியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.