ETV Bharat / state

தமிழ்நாட்டில் வளர் இளம் பெண்கள் கருத்தரிப்பது அதிகரிப்பு...பின்னணியை அலசும் கட்டுரை! - INCREASE IN TEENAGE PREGNANCY

தமிழ்நாட்டில் 2023- 2024 ஆம் ஆண்டில் 14,360 பேர் வளர் இளம் பருவ பெண்கள் கருத்தரித்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவாக அலசுகிறது இந்த கட்டுரை.

பிரதிநித்துவப்படம்
பிரதிநித்துவப்படம் (Image credits-IANS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 24, 2025, 7:39 PM IST

Updated : Jan 24, 2025, 7:57 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 2023- 2024 ஆம் ஆண்டில் 14,360 பேர் வளர் இளம் பருவ பெண்கள் கருத்தரித்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

யுனிசெப் வரையறையின்படி வளர் இளம் பருவம் என்பது 13 வயது முதல் 19 வயது என கூறப்படுகிறது. உலகளவில், 15 முதல் 19 வயதுக்குட்பட்ட சுமார் 16 மில்லியன் சிறுமிகளும், 15 வயதுக்குட்பட்ட இரண்டு மில்லியன் சிறுமிகளும் ஒவ்வொரு ஆண்டும் கர்ப்பமடைவதாக கூறப்பட்டுள்ளது. வளர் இளம் பருவத்தினரில் 13 சதவீதம் பேர் கர்ப்பம் அடைந்து குழந்தைப் பெறுகின்றனர். இந்தியாவில் 4 பெண்களில் ஒருவருக்கு 18 வயதுக்கு முன் திருமணம் நடக்கிறது. அதாவது 26.8 சதவீதம் பேர் 18 வயதுக்குள் திருமணம் செய்து கொண்டவர்களாக உள்ளனர். 15 முதல் 19 வயதுடைய பெண்களில் 7.8 சதவீதம் பேர் கர்ப்பமாக அல்லது தாய்மார்களாக இருக்கின்றனர் என தேசிய குடும்ப நல ஆய்வின் புள்ளி விபரத்தில் தெரியவந்துள்ளது.

சேலம், மதுரையில் அதிகம்: தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை நடத்திய ஆய்வில், 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2024ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 49,93,093 கர்ப்பிணிகள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் வயது வாரியாக பிரிக்கப்பட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மொத்தம் 62,870 பேர் வளர் இளம் பருவத்தில் கர்ப்பம் அடைந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக சேலம், மதுரையில் 3,000-க்கும் மேற்பட்டவர்கள் இளம்வயதில் கர்ப்பம் அடைந்துள்ளனர். காஞ்சிபுரம், சிவகங்கை, விருதுநகர், நாகர்கோவில், சென்னை போன்ற மாவட்டத்தில் இதன் சதவீதம் குறைவாக உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 2019ம் ஆண்டு வளர் இளம் வயதில் கர்ப்பம் அடைந்தவர்கள் சதவீதம் 1.1 ஆக இருந்தது. அது 2024ம் ஆண்டுபடி 1.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

2019 -2024ம் ஆண்டு வரை வளர் இளம் பருவத்தில் கர்ப்பம் அடைந்தவர்கள் எண்ணிக்கை
2019 -2024ம் ஆண்டு வரை வளர் இளம் பருவத்தில் கர்ப்பம் அடைந்தவர்கள் எண்ணிக்கை (Image credits-TN Government)

2019 -2024ம் ஆண்டு வரை வளர் இளம் பருவத்தில் கர்ப்பம் அடைந்தவர்கள் எண்ணிக்கையை ஆண்டுவாரியாக கூறும்போது, 2019 முதல் 2020 - 11772 ஆகவும், 2020 முதல் 2021 - 12606 எனவும், 2021 முதல் 2022 - 13447 ஆகவும், 2022 முதல் 2023 - 10685 எனவும் இருந்தது. ஆனால் 2023 முதல் 2024 - 14360 என அதிகரித்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

உடல் நலக்குறைவு ஏற்படும்: இது குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடுவிடம் பேசிய சென்னை எழும்பூர் மகப்பேறு மகளிர் நோயியல் நிலையம் மற்றும் அரசு தாய் சேய் நல மருத்துவமனையின் மருத்துவர் பிரேமலதா, "பெண்கள் 21 வயதிற்கு மேல் கர்ப்பம் அடைய வேண்டும். 18 வயதிற்குள் கர்ப்பம் அடைந்தால் வளர் இளம் பெண்கள் கர்ப்பம் அடைந்தனர் என கூறுவோம். 18 வயதிற்குள் கர்ப்பம் அடையும் போது பிரசவத்தின் போது பல்வேறு சிக்கல் ஏற்படும். எனவே 21 வயதிற்கு மேல் திருமணம் செய்துக் கொள்வது தான் இயல்பானது.

18 வயதிற்கும் கீழ் பெண்கள் உடல்ரீதியாக முழுமையான வளர்ச்சியை அடைந்திருக்க மாட்டார்கள். எனவே மிக குறைந்த வயதில் திருமணம் செய்யும் போது அவர்களுக்கு ரத்தசோகை, ரத்தக் கொதிப்பு போன்றவைகள் ஏற்படும். மேலும் அவர்களுக்கு பிரசவத்திற்கான பாதையும் முழுமையாக வளர்ந்திருக்காமல் இருக்கும். இதனால் குழந்தை பிரசவத்திலும் பிரச்சனை ஏற்படும். அவர்களுக்கு சுக பிரசவம் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது ஏற்படும். தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறையின் சார்பில் பெண்கள் கர்ப்பம் அடையும் போது அவர்களின் விவரங்களை PICME( pregnancy and infant cohort monitoring and evaluation) என்ற இணையதளத்தில் பதிவு செய்கின்றனர்.

பாலியல் குறித்து விழிப்புணர்வு தேவை:அதன் அடிப்படையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தேவையான சிகிச்சை வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களை கண்காணித்து சிகிச்சை அளிக்கவும் ஆலோசனை வழங்கி வருகிறோம். மேலும் கர்ப்பிணியின் பிரசவக் காலத்தை முன்கூட்டியே முடிவு செய்து அவர்களுக்கு பிரசவமும் பார்க்கிறோம். வளர் இளம் பெண்கள் கர்ப்பம் அடைந்தால், அவர்களுக்கு சிக்கல் இல்லாமல் பிரசவம் பார்க்கிறோம். வளர் இளம் பருவத்தினர் கர்ப்பம் அடையும் போது குழந்தையின் வளர்ச்சியும் பாதிக்கப்படும். தாய் வளர்வதற்கான ஊட்டச்சத்து தேவைப்படும் போது, குழந்தை வளர்வதற்கான ஊட்டச்சத்தும் தேவையாக இருக்கும்.

தாய், குழந்தை இருவருக்கும் ஊட்டச்சத்து குறைபாடு, குறைவான உடல் எடை உள்ளிட்டவை நேரிடலாம். கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசு ஊட்டச்சத்து பெட்டகம் கொடுக்கிறது. ரத்தசோகை குறைக்கவும், புரோட்டீன் சத்து அதிகரிக்கவும் ஊட்டசத்து கொடுக்கப்படுகிறது. வளர் இளம் பெண்கள் திருமணம் ஆவதை தடுக்கவும், கருத்தரிப்பதை தவிர்க்கவும் பெண்களுக்கு அடிப்படைக் கல்வியை தர வேண்டும். பெண்களுக்கு 21 வயதில் திருமணம் செய்ய வேண்டும். வளர் இளம் பருவத்தில் அவர்களுக்கான பிரச்சனைகள் குறித்து தெரிவிக்க வேண்டும். பள்ளியில் முகாம் அமைத்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவடன், பாலியல் குறித்தும் விழிப்புணர்வு அளிக்க வேண்டும். மேலும் வளர் இளம் பருவத்தில் உள்ள பெண்களுக்கு பாலியல் குறித்து விழிப்புணர்வு கல்வி அளிக்க வேண்டும்,"என கூறினார்.

சமூகப் பொருளாதாரப் பிரச்னைகள்: மகளிர் சிறப்பு மருத்துவர் சாந்தி கூறும்போது, "தமிழ் நாட்டில் டீன் ஏஜ் கர்ப்பம் ( Teen Age Pregnancy ), அதாவது 13 முதல் 19 வயதிற்கு இடைப்பட்ட இளம் பெண்கள் கருத்தரிப்பது கடந்த 5 ஆண்டுகளில் 20 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது.குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு, பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு, பள்ளி இடை நிற்றல், வறுமை, பெண்கள் மத்தியில் அதிகரிக்கும் வேலையின்மை மற்றும் பல்வேறு சமூகப் பொருளாதாரப் பிரச்னைகள் ஆகியவை இவற்றிற்கு காரணமாக இருக்கலாம்.

அவர்கள் சட்டத்திற்கு புறம்பான கருக்கலைப்பு செய்வது, போலி மருத்துவர்களிடம் கருக்கலைப்பு செய்வது போன்ற நடவடிக்கைகளினால் கருக்கலைப்பு தொடர்பான உடல்ரீதியான பிரச்சினைகளை சந்திப்பதற்கும் , உயிருக்கே ஆபத்தான நிலையை அடைவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே, இப்பிரச்சினை குறித்து ஆராய்ந்து, குழந்தைப் பருவத்தில் கருத்தரிப்பு அதிகரிப்பதை தடுத்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,"என கூறினார்.

குறைப்பிரசவம் ஏற்படும்: இது குறித்து நம்மிடம் பேசிய மருத்துவர்கள் சிலர், "பதின்ம வயதில் கர்ப்பம் அடைவதால் கர்ப்பப்பை முழு வளர்ச்சி அடைந்திருக்காது. இதனால் குழந்தை குறைப்பிரசவம் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கர்ப்பப்பை பக்குவமடைந்திருக்காது. அதனால் கர்ப்பப்பையில் இருக்கும் நஞ்சுக்கொடி (Placenta) ஒட்டாமல் இருக்கும். பனிக்குடத்தில் போதுமான அளவு நீர் இருக்காது. அத்துடன் கர்ப்பப்பை சுருங்கி, சுருங்கி விரியும் தன்மையையும் இழந்துவிடும். கருவுற்றிருக்கும் போதும், குழந்தை பிறந்த பிறகும், தாய்க்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படும். பிரசவத்தின் போது நஞ்சுக்கொடி வெளியே வர முடியாத நிலை கூட ஏற்பட்டு, தாய் உயிரிழக்க நேரும்,"என தெரிவிகின்றனர்.

Last Updated : Jan 24, 2025, 7:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.