ETV Bharat / state

கோவில்பட்டியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்!

author img

By

Published : Mar 12, 2020, 8:31 PM IST

தூத்துக்குடி: கோவில்பட்டியில் தனியார் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால், சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவில்பட்டியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியல்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நடராஜபுரம், நான்காவது தெருவில் தனியாருக்குச் சொந்தமான செல்போன் டவர் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்கள் ரெயில்வே சுரங்கப்பாலம் அருகே இளையரசனேந்தல் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதில் 2500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு இடையே செல்போன் டவர் அமைக்கப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உள்ளதாகவும், குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், வயதான முதியவர்கள், குழந்தைகள் செல்போன் டவரிலிருந்து வரும் கதிர் வீச்சினால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாலும், இப்பகுதியில் செல்போன் டவர் அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தினர்.

கோவில்பட்டியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்!

இது குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது போராட்டத்தினைக் கைவிட்டனர். இந்தப் போராட்டம் காரணமாக சுமார் 20 நிமிடங்கள் அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க...கொரோனா: ஸ்ரீநகர் கல்வி நிலையங்களுக்கு இன்று முதல் விடுமுறை

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.