தூத்துக்குடி: பழைய பேருந்து நிலையம் இருந்த பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.53 கோடியே 40 லட்சம் செலவில் புதிதாக பேருந்து நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இதனை நகர்புற நிர்வாக வளர்ச்சித்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (ஜன.2) பார்வையிட்டார். சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரும் பார்வையிட்டனர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் கே.என்.நேரு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் தூத்துக்குடி பேருந்து நிலையம் பிப்ரவரி இறுதியில் முடிவு பெற்று மார்ச் மாதம் திறக்கப்படவுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடைபெற்றதாக கூறிய நிலையில், ஐஏஎஸ் தலைமையில், குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 80 முதல் 90% வரை ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடிவடைந்து, பாதாள சாக்கடை திட்டப் பணிகளும் மார்ச் மாதம் முடிவு பெற உள்ளதாக கூறினார்.
ஆய்வின் போது, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்க - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்