ETV Bharat / state

அரசு மீது ஊழல் புகார் சுமத்தும் அண்ணாமலை... ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் - வேல்முருகன்

தமிழ்நாடு அரசு மீது ஊழல் புகார் சுமத்தி வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன்
செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன்
author img

By

Published : Jun 9, 2022, 6:37 AM IST

Updated : Jun 10, 2022, 2:57 PM IST

தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்தில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என்று விலை மதிப்பற்ற மனித உயிர்கள் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் பலியாகிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே தமிழ்நாடு அரசு ஒரு சட்டம் இயற்றி அந்த சட்டம் சரியாக இயற்றப்படவில்லை என்று உயர் நீதிமன்றம் அந்த சட்டத்தை ரத்து செய்த காரணத்தினால் இதுவரையில் தமிழ்நாடு அரசால் இதற்கு தடை விதிக்க முடியவில்லை.

ஆதலால் முதலமைச்சர் உடனடியாக ஆன்லைன் ரம்மி தடைச்சட்டத்தை ஒரு அவசர சட்டமாக கொண்டு வந்து ஆளுநரின் ஒப்புதல் பெற்று உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்ய முடியாத வலுவான சட்டமாக அதை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கின்றேன்.

அதுபோல் தற்போது பள்ளிகளில் மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளிகளில் புற்றீசல் போல் இருக்கின்ற தனியார் பள்ளிகள் ஆங்காங்கே கல்வி கட்டணம் என்கிற பெயரில் பிரிகேஜி, எல்கேஜி, யூகேஜி முதல் வகுப்பு இரண்டாவது என்று சொல்லக்கூடிய இந்த பிரிவுகளில் தமிழ்நாடு முழுவதும் இருக்கிற தனியார் பள்ளிகள் லட்சக்கணக்கில் கல்விக் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள். லட்சக்கணக்கில் கல்விக் கொள்ளையில் ஈடுபடுகின்ற அந்த கல்வி நிறுவனங்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்கு உதாரணமாக ஒரு பள்ளி எல்கேஜி மாணவனுக்கு என்ன பெருசா சொல்லி கொடுக்க போறாங்க, அதற்கு ஒரு ஆண்டுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் முதல் 3 லட்ச ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறார்கள். மேலும் எல்கேஜி பிரிகேஜியஜல் சேர்க்க பெற்றோர்களிடையே நன்கொடை என்ற பெயரில் 5 லட்சம் முதல் 15 லட்சம் வரை வசூல் செய்யப்படுகிறது. அந்த பள்ளிகள் மீது மிக கடும் நடவடிக்கை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எடுக்க வேண்டும்.

தனியார் பள்ளிகள் தற்போது சேர்க்கை பணி தொடங்கி விட்டார்கள். ஆனால் பல்வேறு மாவட்டங்களில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை இன்னும் நடைபெறவில்லை. அது விரைவாக தொடங்கப்படவேண்டும். இதனால் பெற்றோர்கள் சிலர் தனியார் பள்ளியில் சேர்க்க ஒரு முயற்சி ஈடுபடுகிறார்கள்.இதனால் அரசு பள்ளிக்கு வருகின்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

கடந்த 2ஆம் தேதி சுகிர்தன் என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன் பண்ருட்டி கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்று போது புதைகுழியில் சிக்கி உயிரிழந்தான். மணல் கொள்ளை காரணத்தால் அங்கு பள்ளங்கள் ஏற்பட்டு அந்த பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் மழை செல்கின்ற போது சேரும் சகதியுமாக அது மூடி இருக்கிறது. எனவே மணல் மாபியாக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி அரசு இந்த மணல் குவாரிகளை தனியாருக்கு ஏலம் விடுகின்றபோது பொதுப்பணித்துறை முறையாக அதை கண்காணிக்கவேண்டும்.

செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன்

இது நடந்தது எல்லாமே கடந்த கால அதிமுக ஆட்சியில் விடப்பட்ட டெண்டர்கள் அடிப்படையில் இந்தத மணல் கொள்ளை நடைபெற்றுள்ளது” என்றார். தொடர்ந்து, பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு அரசு மீது ஊழல் புகார் சுமத்தி வருவது குறித்து கேட்டதற்கு, “அதற்கு ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். அண்ணமலை ஒருமையில் பேசுவது தனிப்பட்ட நபர்களை விமர்சனம் செய்வது பண்பாடற்ற அரசியல், நாகரிகமற்ற கருத்துக்களை அவர் வெளியிட்டு வருகிறார். அது ஏற்புடையதல்ல” என்றார்.

இதையும் படிங்க: 'அடுத்த 10 ஆண்டுகள் மாநிலம் தழுவிய பயணம்'- எடியூரப்பா திடீர் அறிவிப்பு!

Last Updated : Jun 10, 2022, 2:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.